பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 289 பார்ப்பு, பறழ், குட்டி, குருளே, கன்று, பிள்ளை, மகவு மறி, குழவி எனவரும் இவ்வொன்பதும் இளமைப் பண்பு பற்றிய மரபுப் பெயர்களாகும். ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் ஆண்பால் பற்றிய மரபுப் பெயர் களாகும். பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி. பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பன பெண்மை பற்றிய மரபுப் பெயர்களாம் - என இம்மூவகைப் பெயர்களையும் இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார். இளமைப் பெயர். இளமைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்ன வற்றுக்கு உரியன என்பன இவ்விய லில் 4-முதல் 26-வரையுள்ள நூற்பாக்களால் விரித்து விளக்கப் பெற்றுள்ளன. பார்ப்பு, பிள்ளை என்னும் இரண்டும் பறப்பவற்றின் இளமைப் பெயர்களாம். இவை ஊர்வனவற்றிற்கும் உரியனவாம். மூங்கா, வெருகு, எலி, அணில் என்னும் இவை நான்கும் குட்டி' என்ற பெயர்க்குரியன. இவற்றைப் பறழ்' என்ற பெயரால் வழங்கினும் குற்றமில்லை, நாய், பன்றி, புலி, முயல், நரி என்பவற்றின் இளமைப் பெயர் குருளே என்பதாகும். இவ்வைந்தினையும் குட்டி பறழ்' 1. மூங்கா-கீரி. 2. வெருகுகாட்டுப்பூனே.