பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 29; மேற்குறித்தவற்றுள் குழவி, மக, என்ற இரு பெயர்களைத் தவிர ஏனைய பெயர்கள் மக்களுக்கு உரியனவாக வழங்கப்பெரு." பிள்ளை, குழவி, கன்று, போத்து’ என்னும் இந்நான்கும் ஓரறிவுயிர்கட் குரியனவாய் வழங்கும் இளமைப் பெயர்களாம். இப்பெயர்களால் நெல்லும் புல்லும் குறிக்கப்பெறுதல் இல்லை. பயின்று வழங்கும் இளமைப் பெயர்களைக் கூறுமிடத்து மேற்கூறியவை யன்றி வேறில்லை என்பர்சி தொல்காப்பியர். அறுவகை உயிர்ப்பாகுபாடு:- மேல் இளமைப் பெயர் பற்றிய மரபு கூறும் வழி, ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகு பாடு அதிகாரப்பட்டமையால் அதைெடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் அறுவகையாக இவ்வியல் 27-முதல் 34-வரை யுள்ள சூத்திரங்களால் வகைப்படுத்திக் கூறியுள்ளார். உற்ருல் அறிவதாகிய உடம்புணர்ச்சி யொன்றேயுடையது ஓரறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதனேடு சுவையறிதலாகிய 1. ஆண் பிள்ளை, பெண் பிள்ளே எனப் பிள்ளேப் பெயரும் மக்கட்பாற்படுவன கொள்க என எதிரது போற்றிக்கொள்வர் பேராசிரியர், 2. ஒரறிவுயிர்க்குரிய இளமைப் பெயராகிய போத்து’ என் பதும் ஆண்பாற் பெயராகிய 'போத்து’ என்பதும் பொருள் வகை பால் வேறென வுணர்க. 3. ‘புல்” என்பது, இங்கு நெல்லேச் சார்த்திக் கூறப்பட்டமை யால் உணவு வகையாகிய கூலப் பயிர்களைக் குறித்த பெயரெனவும் புறத்தே வயிர முடையவற்றுக்கு வழங்கும் ‘புல்” என்ற பெயர் இதனின் வேறெனவும் உய்த்துணர்தல் வேண்டும். 4. "அவை யல்லது பிறவில்லே யென்ற மையின் ஒன்றற் குரியவற்றை ஒன்றற்குரிய வாக்கி வழங்குவனவும் கொள்ளப்படும். இனி எடுத்தோதாதனவற்றுள் சிங்கத்திற்குப் புலிக் குரியனவும், உடும்பு, ஓந்தி, பல்லி என்பவற்றுக்கு அணிலுக் குரியதும், நாவிக்கு மூங்காவிற் குரியதும் இவ்வாறே பிறவும் இவ்வகையின் ஏற்பனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 'சொல்லுங்காலை என்ற த ஞல், சொல்லாத நாகு முதலிய இளமைப் பெயரும் தழுவிக் கொள் னப்படும் என்பர் பேராசிரியர்,