பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தொல்காப்பியம் நுதலியபொருள் நாவுணர்வும் உடையது ஈறறிவுயிர். இவ்விரண்டுடன் முக்கிளுல் முகர்ந்தறிதலாகிய நாற்ற வுணர்ச்சியும் உடையது மூவறிவுயிர். இம்மூவகையுணர்வுடன் கண்களாற் கண்டறிதலாகிய ஒளி யுணர்ச்சியும் பெற்றது நாலறிவுயிர் இந்நால்வகை யுணர்வுடன் ஓசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப் பெற்றது. ஐயறி வுயிராகும். மேற்கூறிய ஐம்பொறி யுணர்வோடு உய்த்துணர் வாகிய மனவுணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயிரெனப் படும். புல்லும் மரனும் ஒரறிஉடையன. அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம். நந்தும் முரளும் ஈரறிவுடையன; அவ்வகை யைச் சார்ந்தன பிறவும் உள. சிதலும் எறும்பும் மூவறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. நண்டும் தும்பியும் நான்கறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள.சி மாவும் புள்ளும் ஐயறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. மக்கள் தாம் ஆறறிவுடைய உயிர்களாவர்; 1. பிற வாவன: புறக்காழும் அகக்காழும் இன்றிப் புதலும் கொடியும் போல்வன. இவை தொட்டால் அறியும் பரிசவுணர்ச்சி யொன்றே யுடைமையால் ஒரறிவுயிரெனப் பட்டன. 2. நந்து என்ற தல்ை சங்கு, நத்தை, அலகு, நொள்ளே என் பனவும், முரள் என்ற தல்ை இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பனவும் கொள்க என்பர் இளம்பூரணர். இவை பரிசவுணர்வும் சுவை யுணர்வுமாகிய இரண்டேயுடையன வாதலால் ஈரறிவுயிரெனப் ه GT 5 سة سالاً 3. சிதல்-கறையான், ஒன்றுதாக்கிய வழியன்றி யறியாமை யால் இவற்றுக்குக் கண்ணில்லே யென்பதும் அதட்டியோசைப் படுத்திய நிலையில் அறிந்து விலகாமையால் செவியில்லே யென்பதும் நன்கு புலணுகும். 4. வடிவமுடைமையால் ஊற்றுணர்வும், இரை கோடலால் நாவுணர்வும், நாற்றத்தின் வழிச் சொல்லுதலால் மூக்குனர்வும் பொருளின் நிறங்கண்டு பற்றலாற் கண்ணுணர்வும் புலமைாதலின் இவை நாலறிவுயிரெனப்பட்டன. 5. மா-விலங்கு. புள்-பறவை. “மாவும் மாக்களும்’ எனப் பாடங் கொள்வர் பேராசிரியர், மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சி யில்லாதார்.