பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தொல்காப்பியம் நுதலியபொருள் "ஆண்" என்றுசொல் இருதிணை ஆண்பாற்கும், பெண்' என்றசொல் இருதிணைப் பெண்பாற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப்படும். பெண்பாற் பெயர்:- பெண்மைப்பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்னவற்றுக்குரியன என்பதனை இவ்வியல் 52-முதல் 68-முடியவுள்ள சூத்திரங்களாலும் இம் மரபுபற்றிய அதிகாரப் புறனடையினை 69, 70-ஆம் சூத்திரங்களாலும் எடுத் துரைப்பர் ஆசிரியர். 'பிடி' என்னும் பெண்பாற் பெயர், யானையினத்துக்கு உரியதாகும் 'பெட்டை என்ற பெண்பாற் பெயர் பெறுதற்குரியவை. ஒட்டகம், குதிரை, கழுதை, மரை என்பனவும் பறவைகளும் ஆகும். பேடை பெடை என்ற பெண்மைப் பெயர்கள் பறவையினத்துக்குப் பொருந்துவன. 'அளகு' என்னும் பெண்மைப் பெயர், கோழி, கூகை என்ற இவ்விரண்டிற்கல்லது ஏனையவற்றுக்கு ஏலாததொன்ரும். இப் பெயர் ஒரோவழி மயிலுக்குரியதாய் வருதலும் உண்டு. 'பிணை என்னும் பெண்மைப் பெயர்க்குரியன. புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் நான்குமாம்." "பிணவு, பினவல் என்னும் பெண்மைப் பெயர்கள் பன்றி புல்வாய், நாய் என்பவற்றுக்கு உரியன. 'ஆ என்னும் பெண்மைப்பெயர், பெற்றம், எருமை, மரை என்ற மூன்றிற்கும் உரியதாகும். .ே "பிணை’ என்னுஞ் சொற்பொருளின் உண்மை நோக்கின் பிரியாது பிணையும் பிற சாதிக் குஞ் செல்லுமாயினும் மரபு நோக்கப் பிணேயென்றற்குச் சிறப்புடையன. இவை நான்கும் என்றவாறு.