பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 397 பெண், பிணவு' என்ற பெயர்கள், மக்களிற் பெண் பாலுக்கு உரியனவாம். "நாகு' என்னும் பெண்பாற்பெயர், எருமை. மரை, பெற்றம், நீர்வாழுயிராகிய நந்து என்பவற்றுக்கு உரியதாகும். 'முடு, ‘கடமை' என்ற பெண்மைப் பெயர்கள் ஆட்டினத் துக்கே உரியனவாம். "மந்தி என்னும் பெண்மைப் பெயர், குரங்கு, முசு, ஊகம் என்ற மூன்றற்கும் உரியதாகும். ஆண் குரங்கினைக் கடுவன்’ என்றும், மரப் பொந்தினுள் வாழும் கூகையைக் கோட்டான்' என்றும், கிளியைத் 'தத்தை' என்றும், வெருகினைப் பூசை என்றும், ஆண் குதிரையைச் சேவல் என்றும், பன்றியை ஏனம் என்றும், ஆண் எருமையினைக் 'கண்டி என்றும் இவ்வாறு வழங்கும் பெயர்கள் வழக்கினுள் நிலைபெற்று விட்டமையால் இவை கற்றறிந்தோரால் விலக்கப் படா எனவும், பெண் ஆண் பிள்ளை' என்ற பெயர்களும் மேற் கூறியவாறு வழக்கினுள் நிலைபெற்றன எனவும் கூறுவர் ஆசிரியர், இவ்வியலில் 71 முதல் 85 முடியவுள்ள சூத்திரங்கள் பதினைந் தும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூல், கரகம், முக்கோல், மணே என்பன அந்தணர்க்கு உரியனவாம். படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி முதலாகப் பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரியனவாம். அந்தணுளர்க்கு உரியனவாக ஒதப்பட்டவற்றுள் அரசர்க்குப் பொருந்துவனவும் சில உள.' 1. அவை ஈதல், வேட்டல், வேட்பித்தல், ஓதல் என்னும் நாலு தொழில் என்பர் இனம்பூரணர்.