பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 தொல்காப்பியம் நுதலியபொருள் பரிசில் கடாநிலையும் பரிசில் விடையும் போல்வனவும் பாடாண்திணைக்குரிய துறைப்பொருள் பற்றிவரும் கிழமைப் பெயர்களும் நெடுந்தொகை, செம்மல் என்பன முதலாகவரும் பிறவும் சாதிவகையாற் பொருந்தச் சொல்லப் பெறுதல் அந்தணர்க்கு உரியதன்ரும். ஊரும், இயற்ப்ெயரும் சிறப்புப்பெயரும் ஆகிய பெயர்களும் தத்தமது தொழிலுக்கேற்ற கருவியும் ஆகிய அவை அவரவர்களைச் சார்த்திச் சொல்லப்பெறும். தலைமைக்குணமுடையாராகக் கூறுஞ்சொல்லும் அவரவர் நிலைமைக்குப் பொருந்துமாறு கூறப்படும். இடையிருவகையோராகிய அரசரும் வணிகரும் அல்லது ஏனையோர் படைப்பகுதி பெருர். வைசிகன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறு வான். எட்டுவகைக் கூலங்களாகிய கூலங்களைப் பெருக்குதலும் வணிகரது கடமையாகும். கண்ணியும் தாரும் அவர்க்குச் சொல்லப்பெறும். வேளாண் மாந்தர்க்கு உழுதுண்டு வாழ்தல் அல்லது வேறு தொழில் இல்லை யென்பர். வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினல் படையும் கண்ணியும் அவர்க்கு உளவாம் என்று கூறுவர். அந்தணுளர்க்கு அரசர் தன்மையும் நீக்கத் தக்கதன்று. வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் எனச் சொல்லப்பட்டன வெல்லாம் மன்னனுல் ஏவப்படும் 1. "கண்ணி என்பது, சூடும்பூ, தார் என்பது, ஒரு குடிப் பிறந்தார்க்குரித்தென வரையறுக்கப்படுவது என விளக்குவர் பேராசிரியர்,