பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30% தொல்காப்பியம் நுதலிய பொருள் திணைப்பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகை யாலும் பகுத்துரைத்ததன்றி அவர்களே வேளாண் மாந்த ரென்ருே வைசியரென்ருே இவ்வாறு வருணம் பற்றி ஆசிரியர் யாண்டும் குறிப்பிடவேயில்லை. வைசிகன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப்பெற்றிலது. வருணம் நான்கு என்ற தொகையினை ஆசிரியர் முன் தெளிவாகச்சொல்லாத நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் இடையிரு வகையோர் என இங்குக் குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும் அவ்விருதிறத்தோரல்லாத பிறாக்குப் படைப் பகுதி கூறுதல் இல்லையெனக்கூறும் இவ்வியல் 77-ஆம் ஆத்திர விதி, பின்னுள்ள 82-ஆம் சூத்திர விதிக்கும் சங்க நூல்களிற் காணப் படும் பழந்தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும். வேளாண் மாந்தர் என்றதொரு குலப்பிரிவு தொல்காப்பியனரால் முன்னர்க் குறிக்கப்பெறவில்லை. உரிப்பொருளாகிய ஒழுகலாறு பற்றிய இச்செய்திகள் முதல், கரு, உரி என்னும் பொருட் பகுதிகளை விளக்க அகத்திணையியல். புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் கூறத்தக்கனவேயன்றி, மரபுச் சொற் களின் வழக்குப் பயிற்சியைக் கூறுதற்கமைந்த இம் மரபியலில் இடம் பெறத்தக்கன அல்ல. ஆகவே, 71-முதல் 85-வரையுள்ள இச்சூத்திரங்கள் பதினைந்தும் நால்வகை வருணப் பாகுபாடு இத்தமிழ் நாட்டில் உலக வழக்கில் வேருன்றத் தொடங்கிய மிகப் பிற்காலத்திலே தான் இம்மரபியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், பிற்றைநாளில் களப்பிரர், பல்லவர் முதலிய அயல் மன்னரது ஆட்சியுட்பட்டுத் தமிழ்நாடு அல்லற்பட்ட நிலையிலே தமிழரது உரிமை யுணர்வினைச் சிதைத் தற்குரிய இத்தகைய அடிமைக் கருத்துக்கள் சில தமிழ்முதல்நூலாகிய தொல்காப்பியத்திலும் அயலாரால் மெல்லமெல்ல நுழைக்கப்பட்டமை வியப்பிற்குரியதன்