பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 301. றென்பதும், மனு முதலிய வடமொழி நூல்களால் வளர்க்கப்பட்ட நால்வகை வருணத்தைப் பற்றிய நம்பிக்கை தமிழ் மக்கள் உள்ளத்தில் வேருன்றி நிலைபெற்றுவிட்ட பிற்காலத்திலே வாழ்ந்த வர்கள் இளம்பூரணர், பேராசிரியர் முதலிய பெருமக்களாதலின் அன்னேர் தொல்காப்பியத்திற்கு உரைகாணும் நிலையில் தம் காலச் சூழ்நிலையில் அகப்பட்டு இடைச் செருகலாகிய இச்சூத் திரங்களைத் தொல்காப்பியனுர் வாக்கெனவே உண்மையாக நம்பி உரையெழுத நேர்ந்ததென்பதும் ஆழ்ந்துணரத் தக்கன வாகும். இவ்வியல் 96-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களால் ஒரறி வுயிர்களுக்குரிய சொல்மரபுகள் உணர்த்தப்படுகின்றன. உள்ளே வயிரமின்றிப் புறத்தே வயிரமுடையவற்றைப் புல்' எனவும், உள்ளே வயிரமுடையனவற்றை 'மரன் எனவும் வழங்குவர்." தோடு, மடல், ஒலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலே எனக் கூறப்பட்ட உறுப்பின் பெயர்களும் இவற்றையொத்த பிறவும் புல் என்ற வகையைச் சார்ந்துவரும்.” 1. புல்” என்ற வகையைச் சார்ந்தவை தெங்கு, பனே, கமுகு மூங்கில் முதலாயின. மரமெனப்படுவன விள, பலா முதலியன. புறத்தும். அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பு (வயிரம்) இன்றி யும் அகில் மரம் போல்வன இடையிடை பொய்பட்டும் (புரையுடை யதாகியும்) வரினும் சிறுபான்மை அவையும் புல்லும் டிரனும் என அடங்கும்’ என்பர் பேராசிரியர். 2. புற வயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதவற்றுள் வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் முதலிய ஒரு சாரன இவ்வகைப்பட்ட உறுப்புப் பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும்’ என்பர் இளம்பூரணர். பிறவும் என்ற தல்ை, குரும்பை, நுங்கு, நுகும்பு, போந்தை யென்ற ற் ருெடக்கத்தனவும் புல்லின் உறுப்பாகக் கொள்ளப்படும் நுகும்பு-மடல் விரியாத குருத்து (புறம்-249), போந்தை-கருக்கு.