பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 தொல்காப்பியம் நுதலியபொருள் இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும் அனேயவை பிறவும் மரன் என்ற வகையைச் சார்ந்து வரும் உறுப்பின் பெயர்களாகும்." காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல், மரம் என்னும் அவ்விருவகைக்கும் உரியனவாகும்.” நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலால் இருதிணையும் ஐம்பாலும் வழுவாமல் திரிபின்றிப் பொருந்திய சொற்களால் உலகத்துப் பொருள்களை வழங்குதல் வேண்டும். உலக வழக்காவது வரலாற்று முறைமை பிறழாது வருதலே தக்கதாதலின் அவ்வழக்கினை அடியொற்றியமைந்த செய்யுட்களும் மேற்குறித்த மரபு நிலையில் திரியாது அமைதல் வேண்டும். மரபுநிலை திரிந்து வேறுபடுமானல் உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து வேறுபட்டுச் சிதைவனவாம். உலக நிகழ்ச்சி யெல்லாம் உயர்ந்தோரையே சார்பாகக்கொண்டு நிகழ்தலால் செய்யுட்கு அடிப்படையாகிய வழக்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, உயர்ந்தோர் வழங்கிய வழக்கேயாகும் என இவ்வியல் 91 முதல் 94 வரை யுள்ள சூத்திரங்களால் மரபு பற்றிய இலக்கணத்தை ஆசிரியர் நிறைவு செய்துள்ளார். உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் நெடுங்காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள், இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருள்களின் 3. புற வயிர்ப்பும் உள் வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் முருக்கு தணக்கு முதலிய ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயருடையன மர மெனப்படும். புல்லினுள் ஒரு சாரன இலே. பூ முதலிய உறுப்பின் பெயர்களைப் பெறுவனவும். புல்லிற்குச் சொல்லப்பட்ட ஈர்க்கு முதலிய உறுப்புக்கள் சில மரத்திற்கு வருவனவும் வழக்கு நோக்கி உணர்ந்து கொள்ளத் தக்கனவாம். 4. தாழை பூவுடைத்தாகல்ானும் கோடுடைத்தாகலானும் புறவயிர்ப்பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல்” என்றல் பெரும்பான்மை என்பர் இளம்பூரணர்.