பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 303 இளமைத் தன்மை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தன எனவும் இருதிணைப்பொருள் களின் இயல்புகளை நுண்ணிதின் விளக்குவனவாகிய இம்மரபுச் சொற்களின் பொருள்நிலை மாறுபடாதபடி உலக வழக்கினை யும் செய்யுள் வழக்கினையும் போற்றிக்காத்தல் வேண்டுமெனவும் ஆசிரியர் தொல்காப்பியனர் இவ்வியலில் விளக்கிய திறம் அறிந்து போற்றத் தக்கதாகும். இவ்வியலின் இறுதியில் 95 முதல் 112 வரையுள்ள சூத்திரங் கள் நூலினது இலக்கணம் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூலுக்கு இன்றியமையாத மரபிற் பிறழாதனவாகி உரைக் கப்படும் நூல்கள் முதனூல், வழிநூல் என இருவகைப்படும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய முதல்வனற் செய்யப் பெற்றது முதனூலாகும். முதல்வன் செய்த நூலின் வழியே இயற்றப் பெறுவது வழிநூல் எனப்படும். விரிந்து பரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும், தொகுத்துச் சொல்லப்பட்டவற்வை விரித்து விளக்குவதும், தொகையும் விரியும் ஆகிய அவ்விருதிறமும் ஒருங்கு அமைந்ததும், பிறமொழி நூல்களை அடியொற்றி மொழி பெயர்க்கப் பெறுவதும் என வழி நூல் நான்கு வகைப்படும். சூத்திரத்தின் பொருளே விரித்துரைகும் நிலையில் அமைந்த காண்டிகையுரையும் அதனையும் விளங்கக்கூறும் உரை விகற்பமும் உடையதாகிப் பத்துவகைக் குற்றமுமினறி நுண்பொருளின வாகிய முப்பத்திரண்டு உத்திகளோடும் பொருந்திவருவது நூல் என சிறப்பித்துரைக்கப்படுவதாம். சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்குமிடத்தும் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகையுரையினை இயைத்