பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தொல்காப்பியம் நுதலியபொருள் துரைக்குமிடத்தும் இப்பொருளே இவ்வாறு கூறல் வேண்டுமென விதித்தலும், இப்பொருளே இவ்வாறு கூறலாகாது என விலக்கு தலும் ஆகிய இருவகையோடு அவ்விடத்துப் பொருந்துவன கூட்டியுரைக்கப்படும். மேல், தொகுத்தல் முதலாக நால்வகையாற் சொல்லப் பட்ட பொருளோடு சிலவெழுத்தினுல் இயன்ற யாப்பினதாய், விரித்துரைத்தற்கேற்ற பொருளனைத்தையும் தன்னகத்து அடக்கி நுட்பமும் விளக்கமும் உடையதாகிப் பல்லாற்ருனும் பொருளே ஆராய்தற்குக் கருவியாய் விளங்குவது சூத்திரத்தின் இயல்பாகும். சூத்திரத்தில் அமைந்த சொற்பொருள்களை விட்டு நீங்காத விரிவுடன் பொருந்தி அதன் பொருளே முடித்தற்கேற்ற எதுவும் எடுத்துக்காட்டும் வாய்ந்த உரை காண்டிகையெனப்படும். சூத்திரத்தினது உட்பொருளேயன்றி அதற்கு இன்றியமை யாது பொருந்துவனவெல்லாம் அதனேடுகூட்டிச் சொல்லுதல் உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும். மாறுபட்ட கொள்கையை இடையே கொணர்ந்துரைத்து வினவுதலும், அதற்கு மறுமாற்ற மாகிய விடைகூறுதலும் உடையதாய்த் தனக்கு முதனு:லாகிய சூத்திரத்தானும் அதன் பொருள் முடியினை யுணர்த்தும் பிற நூலானும் தெளிய ஒருபொருளை ஒற்றுமைப்படுத்து இதுவே பொருளாகும் எனத் துணிதல் உரையினது இயல்பாகும். மேற்கூறிய இலக்கணமெல்லாம் சிதையாது மாட்சிமைப் படினும் முதனூலொடு பொருள் மாறுகொள்ளின் அந்நூல் சிதை வுடைய தெனவேபடும். முதல்வன் செய்த நூலின் கண்ணே இத்தகைய சிதைவுகள் உளவாகா. 1. இவ்விரிவுரையினைப் பிற்காலத்தார் விருத்தியென்ற பெயரால் வழங்குவர்.