பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 305 முதனூலேயே அடியொற்றி ஒருவன் நூல் செய்யினும், வல்ல வற்ை புணர்க்கப்படாதவார இசைபோன்று அவ்வழி நூலமைப் பில் குற்றம் நேர்தல் இயல்பேயாம். குற்றங்களாவன: கூறியது கூறல், மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைப்படக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னுயாப்பிற்ருதல், பழித்த மொழியான் இழுக்கங்கூறல், தன்னுைெரு பொருள் கருதிக்கூறல், என்ன வகையினும் மனங்கோளின்மை என்னும் இப்பத்தும் இவை போல்வன பிறவுமாகும். மேற்கூறிய குற்றங்களின்றி அவற்றுக்கு மாறுபட்ட குணங்களேயடையதாதல் நூலிற்கு அழகென்பர். சூத்திரத்தில் அமைந்த பொருளமைப்பினைப் புலப்படுத்து தற்குக் கருவியாகிய நூற்புணர்ப்பு உத்தியெனப்படும். நுதலிய தறிதல் முதல் உய்த்துக் கொண்டுணர்தல் ஈருக உத்தி முப்பத்திரண்டாகும். ' சொல்லிய அல்ல பிற அவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்கநாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே” என இவ்வியல் நிறைவு பெறுகின்றது. செய்யுளியலுள் நூலைப் பற்றியும் அதன் பகுதிகளாகிய சூத்திரம், ஒத்து, படலம் என்பவற்றைப் பற்றியும் உரைவகை நடையைப் பற்றியும் விளக்கிய ஆகிரியர், மீண்டும் அவற்றின் இயல்பினை ஈண்டுக் கூறுதல் கூறியது கூறலாமாதலானும், இப்பொருள் பற்றிச் செய்யுளியலில் அமைந்த சூத்திரங்களையும் இவ்வியலில் உள்ள சூத்திரங்களையும் ஒப்பவைத்து நோக்குங்கால் இவ் விருவகைச் சூத்திரங்களும் சொல் நடையாலும் பொரு