பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 தொல்காப்பியம் துதலியபொருள் ளமைப்பாலும் தம்முள் வேறுபாடுடையவாதல் நன்கு புலனுமாத லானும், நூன்மரபு பற்றிய இச் சூத்திரங்கள், தொல்காப்பியஞர் காலத்திற்குப் பின்பு இயற்றப்பெற்று வழங்கியவை, பிற்காலத்த வரால் எல்லா நூற்கும் உரிய பொதுப்பாயிர மரபாக இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டுமெனவும், அதனல் பின்வந்த உரையாசிரியர்கள் இச்சூத்திரங்களையும் தொல்காப்பிய ஞர் வாய்மொழியெனவே கொண்டு உரையெழுத நேர்ந்த தெனவும் எண்ணுதற்கும் இடமுளது.' நூலின் இலக்கண முணர்த்துவனவாக அமைந்த இச் சூத்திரங்களின் சொற் பொருளமைதியினைக் கூர்ந்து நோக்குங் கால் இவை காலத்தாற் பிற்பட்டன அல்ல என்பதும் தொல் காப்பிய நூலுடன் அடுத்து வைத்து எண்ணத்தக்க பழமை யுடையன என்பதும் நன்கு விளங்கும். 1. நன்னூலிற் பொதுப்பாயிரமாக அமைந்த சூத்திரங்கள் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டன அல்ல என்பது, நன்னூ லுரையாசிரியர்களுள் முதல்வராகிய மயிலேநாதர் மலர் தலையுல கின்' என்னுஞ் சிறப்புப்பாயிர வுரையின்முன் தோற்றுவாயாக அச்சூத்திரங்களேத் தந்து, பின் சிறப்புப் பாயிரத்திற்கு உரை யெழுதி முடித்திருத்தலால் உய்த்துணரப்படும். இங்ஙனமாகவும் பின்வந்த உரையாசிரியர்களாகிய சங்கர நமச்சிவாயப் புலவர் முதலிய பெருமக்கள் இப்பொதுப் பாயிரமும் பவணந்தி முனிவரால் இயற்றப் பெற்றதெனவே கொண்டு உரை யெழுதியுள்ளார்கள். நூலாசிரியராவார் ஒவ்வொருவரும் எல்லா நூற்கும் உரிய பொதுப் பாயிர இலக்கணத்தைத் தம் நூலிற் சொல்ல வேண்டுமென்னும் இன்றியமையாமையில்லே. ஆகவே அப்பகுதி பவணந்தி முனிவர் வாக்கென உறுதியாகக் கொள்ளுதற்கில்லே. அதுபோலவே இம் மரபியலிலுள்ள நூன்மரபு பற்றிய பகுதியும் பண்டை நாளில் மேற்கோனாக வழங்கிய பழஞ் சூத்திரங்களின் தொகுதியாய் இவ் வியலின் இறுதியில் இணைக்கப் பெற்றிருத்தலும் கூடும்.