பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொல்காப்பியம் யைத் தொல்காப்பியனர் கூற்ருக இறையனர் களவியலுரை யாசிரியர் கூறியதன் கருத்தும் இதுவேயாகும்." தொல்காப்பியனர் காலத் தமிழகத்தின் தென்பாற்கெல்லே யாகவே விளங்கிய குமரியாறு அவர்காலத்திற்குப் பின்ன்ர் நிகழ்ந்த கடல்கோளால் அழிந்தது. இக்கடல்கோள், இடைச் சங்கத்தின் இறுதியில் முடத்திருமாறன் காலத்தில் நிகழ்ந்திருத் தல் வேண்டும். "அக்காலத்துப்போலும் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டது" என இடைச்சங்க வரலாற்றின் இறுதியிலும். "அவர்களைச் சங்கம் இ இயிஞர் கடல் கொள்ளப்பட்டுப் போ ந் திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யிருக நாற்பத்தொன்பதின்ம ரென்ப' எனக் கடைச்சங்க வரலாற்றி லும் களவியலுரையாசிரியர் குறிப்பிடுதலால் இச்செய்தி புலனுதல் காண்க. இக்கடல்கோளுக்குப்பின் தமிழகத்தின் தெற்கெல்லை யாகக் குமரிக்கடல் விளங்குவதாயிற்று. இளங்கோவடிகள், "நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னுட்டு” எனத் தம் காலத் தமிழகத்திற்கு எல்லை கூறுகின்ருர், 'தொடி யோள் பெளவம் என்பது தமிழ்நாட்டின் தென் பாலமைந்த எல்லையாகும். தொடியோள் பெளவம் என்பதற்குச் சிலப்பதிகார வுரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம் இவண் ஆராய்தற் குரியதாகும்: 1. "வடக்குத் தெற்குங் குடக்குங் குணக்கும் வேங்கடங் குமரி தீம் புனற் பெளவமென் றந்நான் கெல்லே யகவயிற் கிடந்த நூல தின் முறையே வாலிதின் விரிப்பின்’ என வும், "வட வேங்கடந் தென் குமரி யாயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து' எனவும் காக்கைபாடினியாருந் தொல்காப்பியருைஞ் சொன்கு ரா.கலின்’ (இறையனர் களவியல் முதற் சூத்திரவுரை).