பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 29 "தொடியோள்-பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆளுல் நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னுது பெளவம் என்றது என்னையெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து அகத்தியஞரும் இறையனரும் குமர வேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவர் உள்ளிட்ட நாலாயிரத்து நானுற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானுற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினர் காய்சினவழுதிமுதற் கடுங்கோன் ஈருயுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறிஞர் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்திய கிைய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் படுத்து இரீஇயினன்; அக்காலத்து அவர் நாட்டுத் தென் பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக்காவத ஆறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலே நாடும், ஏழ் பின்பாலே நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும். ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரி யாகிய பெளவம் என்ருர் என்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், “ வடிவே லெறிந்த வான்பகை பொருது பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" என்பதளுனும், கணக்காயனர் மகளுர் நக்கீரனர் உரைத்த இறையனர் பொருளுரையானும் உரையாசிரியராகிய இளம்பூரண