பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொல்காப்பியம் அடிகள் முகவுரையானும் பிறவாற்ருனும் பெறுதும்" என அடியார்க்குநல்லார் தரும் விளக்கம், தொல்காப்பியஞர் காலத் தமிழகப் பரப்பையும் அஃது இடைச்சங்கத்து இறுதியிற் கடல் கோளால் சிதைந்து சுருங்கிய நிலையினையும் தெளிவுபடுத்துத லறிக. தமிழ் நாட்டின் தென்பகுதியிற் பஃறுளியென்னும் பெயரின தாகிய ஆறும் குமரியாறும் ஓடினவென்பதும் அவ்விரு பேராறு களின் இடையே எழுநூற்றுக் காவத அளவில் நாற்பத்தொன்பது நாடுகளும் குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் அமைந் திருந்தன வென்பதும் குமரியாற்றின் வடகரையளவும் கடல் கொண்டொழிதலால் இளங்கோவடிகள் காலத்துத் தமிழ்நாட்டின் தென்னெல்லை குமரிக்கடலாயிற்றென்பதும் மேற்காட்டிய அடி யார்க்குநல்லார் உரையால் இனிது புலனுதலறிக. பாண்டியர்க்குரிய குமரி நாட்டைக் கடல்மீதுர்ந்து வந்து அழித்த செய்தியினை விளக்கக் கருதிய இளங்கோவடிகள், அங்ங்ணம் கடல்மீதுர்ந்து அழித்ததற்குப் புனைந்துரை வகையாற் காரணமுங் கூறுகின்ருர், பாண்டி வேந்தைெருவன் தனது பெருமையினதளவை ஏனை மன்னர்க்கு உணர்த்தி முன்னுெரு காலத்துக் கடலையடிப்படுத்துத் தன்கையிலுள்ள வேலால் எறிந்து வென்ருன் என்றும், அவன்பால் தோல்வியெய்திய கடல் அப் பழம்பகையினை நெடுங்காலம் உளத்துட்கொண்டிருந்து பின் ைெரு காலத்துப் பொருதெழுந்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே பலவாகிய பக்க மலைகளை யுடைய குமரிமலையின் சிகரத்தையும் தன்வாய்ப்பெய்துகொண்ட தென்றும், அந்நிலையிற் பாண்டியன் தனது நாடழிவிற்கு உளந்தளராது வடதிசைக்கண்ணதாகிய கங்கையாற்றையும் இமயமலையையுங் கைக்கொண்டு, கடல்கோளால் தான் இழந்த நிலத்தின் எல்லையளவுக்கு வடபாலுள்ள நாடுகளைத் தனக்குரிய வாக வெண்றுகொண்டான் என்றும், அத்தகைய பேராற்றல்