பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 3] மிக்க தென்னவன் வாழ்வானுக என்றும் மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்துகின்றன். 'அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி' என்பது அம்மறையோன் கூறிய வாழ்த்தியற் பகுதியாகும் இத்தொடரிற் குமரிக்கோடு எனக் குறிக்கப்பட்டது குமரிமலைத் தொடரேயாகும். பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு என அடைமொழியுடன் கூறியதனை நோக்குங்கால் இத்தொடர் குமரிமலையினையன்றிக் குமரியாற்றினைக் குறிப்பதன்றென்பது உய்த்துணரப்படும். தென்றிசையாண்ட தென்னவர் பெருமான் ஈண்டுக்குறிக்கப்பட்ட கடல்கோளால் தன் நாட்டின் தென் பகுதியில் இழந்தவற்றையும், அங்ங்ணம் இழந்த வற்றுக்கு ஈடாக அவன் வடபாற் சென்று தன் வெற்றித்திறத்தாற் பெற்றவற்றையும் மாங்காட்டு மறையோன் கூறிய வாழ்த்தியற் பகுதியில் அடிகள் நிரலே விளக்குகின்ருர், பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளப் என்ற தொடர், கடல்கோளால் பாண்டியன் இழந்தன. பஃறுளி யாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் எனக்குறிக்கின்றது. 'வடதிசைக் கங்கையும் இமயமுங்கொண்டு தென்றிசையாண்ட தென்னவன்' என்னுந்தொடர், அவ்வேந்தன் தான் தெற்கே இழந்தனவற்றுக்கு ஈடாகத் தன் வெற்றித் திறத்தால் வடக்கே பெற்றவை முறையே கங்கையாறும் இமயமலையும் எனக் குறிக்கின்றது இழந்த பஃறுளியாற்றுக்கு ஈடாகக் கங்கையையும் குமரிமலைக்கு ஈடாக இமயத்தையும் வென்று கொண்டான் என்பது புலனுக, அடிகள் நிரல் நிறைப் பொருள்கோள் அமையக்