பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தொல்காப்பியம் கூறியுள்ளார். ஆகவே தென்பாற் பஃறுளியாறு முதலாகக் குமரிமலை யீருகவுள்ள நிலப்பகுதியைமட்டும் கடல் விழுங்கிய வரலாறே மேற்காட்டிய சிலப்பதிகாரத் தொடரிற் சொல்லப்பட்ட தென்பது நன்கு துணியப்படும். எனவே குமரிமலையின் வடக்கே யமைந்த குமரியாறும் அவ்வாற்றிற்கும் குமரிமலைக்கும் இடைப் பட்ட நிலப்பகுதியும் இக்கடல்கோளுக்குத் தப்பியிருந்தன என்பது நன்கு புலனுகும். இந்நிலையிலமைந்த எல்லையினையே வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகம்' எனப் பனம் பாரளுர் குறிப்பிடுகின்றர். அவர் காலத்தே குமரியாற்றின் தெற்கேயுள்ள தமிழ் வழங்கும் நிலத்தையடுத்துத் தமிழ்திரி நிலமாகிய குறும்பனை நாடு அமைந்திருந்தமையால் தமிழ்நாட்டின் தென்னெல்லையாகக்குமரியாற்றினைக் கூறவேண்டிய இன்றியமை யாமை நேர்ந்தது. 'கடல் கொள்ளப்படுவதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது” எனவரும் இளம் பூரணர் கூற்று, குமரிமலை கடலிற் புக்க பின்னர் அம்மலையின் வடக்கே குறும்பனை நாட்டினையடுத்து எஞ்சியிருந்த தமிழ் நிலப் பகுதியும் அதனையொட்டிய குமரியாறும் ஆசிரியர் தொல்காப்பிய ஞர் காலத்திற்குப் பின்னே மீண்டும் ஒரு கடல்கோளால் கடலுள் மூழ்கியழிந்த செய்தியினைக் குறிப்பாற் புலப்படுத்துகின்றது. இங்ங்ணம் இரண்டாம் முறையாக நிகழ்ந்த கடல்கோளுக்குப் பின் எஞ்சியிருந்த தம் காலத் தமிழகத்தின் எல்லையினையே, "நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னட்டு” என இளங்கோவடிகள் வேனிற்காதையிற் கூறுகின்ருர். தொல் காப்பியனர் காலத்துக்கு முன்னும் பின்னுமாக நிகழ்ந்த இவ்விரண்டு கடல் கோள்களிலுைம் ஏற்பட்ட அழிவுகளை ஒன்ருகத் தொகுத்து,