பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 33 'மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின் மெலிவென்றி மேற்சென்று மேவார் நா டிடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியின்ை வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்' என வரும் முல்லைக்கலியில் சோழன் நல்லுருத்திரனர் குறிப்பிடு கின்ருர், பஃறுளியாற்றையும் குமரிமலையையும் வாய்ப்பெய்து கொண்ட முதற் கடல்கோளில் இழந்த நாடுகளுக்காகப் பாண்டியன் வடதிசையிற் கங்கையாற்றையும் இமயமலையையும் வென்று கொண்டான் என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார். இரண்டாம் முறையாக நிகழ்ந்த கடல்கோளில் பாண்டியன் தான் இழந்த நிலப்பகுதிக்கு ஈடாகத் தனக்கு இடமுண்டாக வேண்டிச் சோழன், சேரன் என்னும் இரு வேந்தர்களின் நாட்டெல்லையில் புகுந்து அவர்தம் புலிப்பொறியையும் விற்பொறியையும் அவ் விடங்களினின்றும் போக்கித் தனது அடையாளமாகிய இணைக்கய லிலச்சினையை அங்குப் பொறித்தான் என மேற்காட்டிய கலிப் பாடலிற் சோழன் நல்லுருத்திரனர் கூறுகின்ருர். அவர் கூறு மாறு சோழநாட்டினின்றும் சேரநாட்டினின்றும் பாண்டியல்ை தன்னுட்டுடன் சேர்த்துக்கொள்ளப்பெற்ற நிலப்பகுதிகளாவன சோழநாட்டெல்லையில் முத்தூர்க்கூற்றமும் சேரமானுட்டில் குண்டுர்க்கூற்றமும் ஆகுமெனக் கருதுதல் பொருந்தும். "அங்ங்னமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லையிலே முத்துர்க்கூற்றமும் சேரமானுட்டுக் குண்டுர்க்கூற்றமும் என்னு மிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்” என அடியார்க்குநல்லார் கூறுங்குறிப்பு இரண்டாங் கடல்கோளேக் குறித்த இக் கலித்தொகைப் பாடற்கே பொருந்துவதாகும்.