பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொல்காப்பியம் தொல்காப்பியனர் காலத்து முன்னிகழ்ந்த கடல்கோளாலும் அவ்வாசிரியர்க்குப் பின் நிகழ்ந்த இரண்டாங் கடல்கோளாலும் தமிழ் நாட்டிற்கு நேர்ந்த அழிவுகளையெல்லாம் ஒன்ருகத் தொகுத்து, "காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பெளவ மென்ருர்" என அடியார்க்குநல்லார் இயைத்துரைப்பாராயினர். இங்ங்ணம் தமிழ் நாட்டின் தென்பகுதியில் இருவேறு கடல்கோள் நிகழ்ந்தனவெனினும் இவற்றுள் தொல்காப்பியனர் காலத்து முன்னர் நிகழ்ந்த கடல்கோளே தமிழ்நாட்டிற்குப் பேரழிவினை உண்டாக்கியதாகும். தொல்காப்பியர் காலத்திற்குப்பின் நிகழ்ந்த இரண்டாங் கடல்கோளால் நேர்ந்த இழப்பு தெரியதன்று. குமரி யாற்றின் தென்கரையில் எஞ்சியிருந்த நிலப்பகுதியும் குமரியாறும் இதல்ை அழிந்திருத்தல் வேண்டும். பஃறுளியாறு என்பது குமரியாற்றிற்குத் தெற்கேயிருந்த குமரிமலைத் தொடராகிய பன்மலையடுக்கத்தின் தென்பால் ஓடிய தோர் ஆறு. தென்பாலமைந்த கடல் மீதுர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளவரும் நிலையிற் பஃறுளியாற்றை முதலிற்கொண்டது என்பது புலகை இளங்கோவடிகள் பஃறுளியாற்றை முதலிற் குறித்திருத்தல் காணலாம். பஃறுளியாற்றின் வடபகுதியிலே குமரி மலேயும் குமரியாறும் அமைந்திருந்தமை ' தடநீர்க்குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல்கொண் டொழிதலால்" என வரும் உரைக்குறிப்பிலுைம், குமரியாறு ஒடிய நிலம் கடலாற் கொள்ளப் பட்டு இக்காலத்தும் குமரித்துறையென வழங்கப் பெறுதலாலும் நன்கு துணியப்படும். இப்போது குமரிமுனைக்குத் தெற்கேயுலவும் இந்தியப் பெருங் கடல், பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் பெருநிலயிைருந்ததென் றும், ஆப்பிரிக்காவின் கீழ்க்கரையிலிருந்து இந்தியப் பெருங்கட லின் இடையே நீளத் தொடர்ந்து சென்ற தீவுகளோ அன்றிப் பெரிய நிலமோ இருந்திருத்தல் வேண்டுமென்றும், இப்போது