பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழ் நாட்டின் கண்ணெனத் திகழும் அண்ணுமலைப் பல் கலைக்கழகம் தமிழாராய்ச்சித் துறையின் சார்பில் அரிய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு வருவதனைத் தமிழ்மக்கள் நன்குணர்வர். அண்ணுமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழிலக்கிய வரலாறு என்னுந் தொகுதிகளுள் முதற்ருெகுதியாக அமைந்தது தமிழிலக்கிய வரலாறு-தொல்காப்பியம் என்பதாகும். 1957-இலும் 1970-இலும் வெளியிடப்பெற்ற இந்நூல், இப்பொழுது முன்ரும் பதிப்பாக வெளிவருகின்றது. திருப்பனந்தாள் ரீ காசிமடத்தில் 19-ஆம் பட்டத்தில் எழுந் தருளியிருந்த திருப்பெருந்திரு காசிவாசி சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் தேவாரத் திருமுறைப் பரிசுக்கும் தமிழ் இலக்கண இலக்கிய வெளியீடுகட்கும் ஆக அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தில் நிறுவிய அறக்கட்டளையின் நிதியுதவிகொண்டு தமிழிலக்கிய வரலாறு தொல்காப்பியம் என்னும் இந்நூல் வெளியிடப் பெறு கின்றது. நல்ல தமிழ் நூல்கள் வெளிவருதற்கு அறக்கட்டளை வகுத்த திருப்பெருந்திரு சுவாமிநாதத்தம்பிரான் சுவாமிகளையும் அவர்கள் நிறுவிய நல்லறங்களைப் பேணிக் காத்துச் செந் தமிழும் சிவநெறியும் இணைந்து வளம்பெறத் தாமே அறக் கட்டளைகள் பல நிறுவிப் புகழுருவெய்திய காசிவாசி திருப் பெருந்திரு. அருணந்தித் தம்பிரான் சுவாமிகளையும் பல்கலைக் கழகம் நன்றியொடு நினைவுகூர்கின்றது. தவப்பெருஞ் செல்வர் களாகிய அவ்விருவர்தம் திருப்பணி தமிழ்ப் பணிகள் மேலும் வளம்பெற்ருேங்க வழிவகுத்து அருட்பணிபுரிந்துவரும் ரீ காசி மடத்தின் தலைவரும் செந்தமிழ்ப் புலமை நலம் சிறக்கப் பெற்ற வரும் தவச் செல்வரும் ஆகிய திருப்பெருந்திரு ரீ காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கட்குப் பல்கலைக் கழகம் தன் நன்றியைப் புலப்படுத்துகின்றது.