பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 37 ஒன்று மற்ருென்றைேடு விரவும் வகையில் தென்தமிழ் மக்களும் வடவரும் அளவளாவும் நிலையேற்பட்டது. முத்தமிழுள் ஒன்றற் குரிய இயல்புகள் ஏனையவற்றுடன் இயைத்துரைக்கப்படுவன வாயின. பொதுமக்கள் தம் மொழித் திறத்தையும் பொருட்டிறத் தையும் பகுத்துணரும் ஆற்றலற்றவராயினர். இந்நிலையில் தமிழ் மொழியின் சிறப்பியல்பினை எல்லார்க்கும் விளங்க எடுத்துரைக் கும் இயற்றமிழிலக்கண நூலொன்று இன்றியமையாததாயிற்று. வழக்கும் செய்யுளும் ஒரு மொழிக்கு இலக்கணங் கூறப் புகுந்த நூலாசிரியன் வழக்கிலும் செய்யுளிலும் அம்மொழி நடைபெற்று வளருந் திறத்தினை ஆராய்ந்துணர்தல் வேண்டும். வழக்காவது கற்ருர் கல்லாதார் ஆகிய எல்லா மக்களும் பொருளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களாலாகிய மொழி நடையாகும். மக்களிடையே பலமுறையும் பழகிய சொற்களால் தெளிவாக விரிந்து இயலும் இவ்வழக்கியல் மொழியினைத் தொல்காப்பியனர் சேரிமொழி யென்பர். செய்யுளாவது மேற்கூறிய வழக்கு நடையினை யடிப் படையாகக் கொண்டு உணர்வினின் வல்ல புலவன் திருந்திய சொற்களால் சீர்வகையமையத் தான் கருதிய பொருளைத் திட்ட நுட்பம் செறியச் சுவைபெறப் பாடும் சொல் நடையாகும். கற்ருேர் அரிதின் ஆராய்ந்து சுவையுணர்ந்து மகிழும் இவ்வழகிய மொழிநடையினைச் செய்யுள்மொழி யென்பர் தொல்காப்பியர். மக்கள் தாங்கள் எண்ணிய எண்ணங்களை மற்றவர்களுக்கு விளங்க உணர்த்தற்கும் பிறர் எண்ணங்களைத் தாங்கள் தெளிவாக வுணர் தற்கும் இடைநின்று துணை செய்வது அவர்களாற் பேசப் படும் தாய்மொழியேயாகும். உணர்தலும் உணர்த்தலுமே மொழி யின் செயல்களாம். அவற்றுள் தன் உள்ளக் கருத்துக்களைப் பிறர்க்கு உணர்த்துந் திறமே மொழித் தோற்றத்திற்கும் மக்கள் மன வளர்ச்சிக்கும் அடிப்படையாகும். மக்கட் குலத்தார் தம்