பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 39 'எண்பொருளவாகச் செலச் சொல்லி' எனச் சொல் மேல் வைத்துக் கூறினரெனவும், பிறர்கூறும் பொருள்கள் வழுவுடை யனவாயினும் கேட்பார்க்கு இனிது விளங்காதனவாயினும் அவர் கூறும் சொல்லளவில் நில்லாது அச்சொற்பொருளின் பயனை உய்த்துணர்ந்துகொள்க என்பார், தான் பிறர் வாய் நுண் பொருள் காண்பது எனப் பொருள்மேல் வைத்தோதினரெனவும் இக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் சிறப்புரை இவண் கருதத் தகுவதாகும். எனவே மனவுணர்வுடைய மக்களது ஆக்கப் பொருளாகிய மொழி, உண்ர உணர்த்தலும், உணர்த்த உணர் தலுமென இருவகை அறிவியக்கத்திற்கும் ஏற்ற சொல்லமைப் பினையுடையதாய் வளர்ச்சி பெறுதல் வேண்டுமென்பது திரு வள்ளுவர் கருத்தாதல் இனிது புலனும். எண்பொருளவாகச் செலச் சொல்லுந்திறம் சேரிமொழியாலும், தான் பிறர்வாய் நுண்பொருள் காணுந்திறன் செய்யுள் மொழியாலும் வளர்ந்து பெருகும். வழக்கும் செய்யுளுமாகிய இவ்விருவகை மொழி நடை களும், கல்விப் பயிற்சிக்குரிய வாயிலாய் விளங்கும் மொழி வளர்ச்சிக்கும் அம்மொழி வாயிலாக மக்கள் எய்தும் அறிவு வளர்ச்சிக்கும் இன்றியமையாதன வாயின. ஆசிரியர் தொல்காப்பியனுர், தம் காலத்தே செந்தமிழ் நாட்டில் வழங்கிய உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய இருவகை மொழி நடையினையும் அடிப்படையாகக் கொண்டு அவ்விருவகை வழக்கிலும் பயின்றுவரும் எழுத்திலக்கணத் தினையும் சொல்லிலக்கணத்தினையும். பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்தார். தம் கால இலக்கியங்களிற் காணப்படும் இவ் வியல்புகளுக்கும் தமக்கு முன் செந்தமிழ் மொழியின் இயல்பு முழுவதும் முற்றப்பொருந்திக் கடல்வாய்ப்படாத குமரி நாட்டோடு முற்பட்டுத் தோன்றிய செந்தமிழ்த் தொன்னூல்களாகிய இலக்கண நூல்களுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்புநோக்கி யறிந்து அவ்வாராய்ச்சியின்