பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொல்காப்பியம் பயனுக இயற்றமிழிலக்கணங்களை எழுத்தும், சொல்லும், பொரு ளும் என முறைப்பட நிறுத்தி அவ்விலக்கணங்களைத் தம் நூலுள் தொகுத்தோதினர். இச்செய்தி, 'தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலந் தொகுத் தோனே" எனவரும் சிறப்புப் பாயிரத் தொடரால் புலனுதல் காண்க. இத்தொடரில் செந்தமிழியற்கை சிவணிய நிலம் எனப்பட்டது, தென்மதுரையிலே தலைச்சங்கத்தை தோற்றுவித்துப் புலவர் பலரையும் ஆதரித்துத் தமிழ் வளர்த்த காய்சினவழுதி முதலிய பாண்டியர்களால் ஆளப்பெற்ற பாண்டிய நாட்டின் தென்பகுதி யாய்ப் பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையேயமைந்த நிலப்பகுதியாகும். எழுநூற்றுக் காவதப் பரப்புடைய இந்நிலப்பகுதி நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்ததென அடியார்க்கு நல்லார் கூறினமை முன்னர் விளக்கப்பட்டது. செந்தமிழ் மொழியின் நல்லியல்பு பொருந்தி வளர்தற்கு நிலைக்களஞகிய குமரிநிலப்பகுதியில் முற்பட்டுத் தோன்றிய நூல்களையே முந்துநூல் எனப் பணம் பாரளுர் குறித்தாராதல்வேண்டும் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் என அந்நூலினைச் சிறப்பித்துக் கூறுதலால் இவ்வுண்மை புலனும். பாயிரத்தில் வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும்” எனத் தம் காலத் தமிழகத்தின் எல்லையையும் அவ் வெல்லேயுள் வழங்கிய தமிழ்நூல் வழக்கினையும் முதலிற் குறித்த பனம்பாரளுர், செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்' என்ற தொடரால் மீண்டும் அவற்றையே குறிப்பிட்டார் எனக்