பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொல்காப்பியம் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூ லென்பது உம் பெற்ரும்” எனப் பேராசிரியர் கூறுகின்ருர். தொல்காப்பியருைம் அகத்தியருைம் இங்ங்ணம் பேராசிரியர் கூறுதற்குரிய ஆதாரத்தினை யாராய் தல் இன்றியமையாததாகும், 'தலைச்சங்கமிருந்தார் அகத்தியஞர்’ எனவும் இடைச்சங்கத்தார் அகத்தியணுரும் தொல்காப்பியனரும் எனவும் களவியலுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் என்பதற்குத் தமிழ்கூறும் நல்லாசிரியர் எனப் பொருள் கொண்டு, நல்லாசிரியராவார் அகத்தியனர் முதலாயினேர் என இளம்பூரணர் கூறியுள்ளார். 'வீங்கு கடலுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆளுப் பெருமை யகத்திய னென்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்" என்பதனுல் அகத்தியர் செய்த அகத்தியத்தினை முதனுலெனவும், அவர் வாளுேரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆளுப் பெருமை யுடையா ரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனுலைப் பொருந் தக் கற்றுப் புரைதபவுணர்ந்தோருள் தலைவராயினர் தொல்காப் பியனரெனவும் பன்னிருபடலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது. இனி, பன்னிரு படலத்தை முதல் நூலாகக்கொண்டு அதன் வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றிய ஐயனுரிதருைம், " மன்னிய சிறப்பின் வாளுேர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்