பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 龜鑿 அகத்தியரால் தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவரென்பதும், தாம் இரு குற்றமும் செய்யாதிருக்கவும் தம்மை அகத்தியனர் சபித் தமைக்கு வருந்தி அம்முனிவர் பெருந்தகையைச் சபித்தவ ரென்பதும் ஆகிய செய்திகள் வேறு எந்த நூல்களிலுங் குறிக்கப்படவில்லை. இவ்வாறு ஒவ்வாக் கதைகளையும் முன்னேர் பெயரா , புது நூல்களையும் பிற்காலத்தில் தாமே படைத்துக்கொண்டு பொருந்தாக் கொள்கைகளைப் பரப்பித் திரிதலையே பொழுது போக்காகக்கொண்ட ஒருசிலர் இடைக் காலத்தில் நம் தமிழகத் தில் தோன்றித் தொல்காப்பியனர் முதலிய தொல்லாசிரியர் வரலாறுகளையெல்லாம் நம்மனேர் உள்ளவாறு உணராதபடி குழப்பிவிட்டார்கள் எனத்தெரிகிறது. ‘இனித் தமிழ் நூலுள்ளும் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துக் செய்து காட்டினும் அவை முற்காலத்து இலவென்பது முற்கூறி வந்த வகையான் அறியப்படுமென்பது உம்' எனப் பேராசிரியர் கூறுமாற்ருல் அன்ஞேரது தீச்செயல் புலப்படுமாறு காண்க ஆகவே நச்சிஞர்க்கினியர் சிறப்புப்பாயிர வுரையில் எடுத்துக் காட்டிய கதையினை அவர்க்கு முற்காலத்தவராகிய பேராசிரியர் முதலியோர் ஏற்றுக்கொள்ளவில்லை யென்பது நன்கு விளங்கும். தென்றமிழ் நாட்டவராகிய ஆசிரியர் தொல்காப்பியனரை வட நாட்டிற் பிறந்த யமதக்கினியாரின் மகனரெனவும் பரசுராமரின் உடன் பிறப்பாளரெனவும் அகத்தியணுரொடு மாறுகொண்டா ரெனவும் கூறும் இக்கதையினை நச்சிஞர்க்கினியர்க்கு முன்னுள்ள சான்ருேரேயன்றிப் பின்வந்த சிவஞான முனிவர் முதலிய பெரு மக்களும் மறுத்துரைத்துள்ளார்கள். அங்ங்னமாகவும் இக்காலத்து ஆராய்ச்சியாளர் சிலர் இப்பொய்க் கதையினை மெய்யெனக் கூறித் தமிழ்க் குடியிற்பிறந்த தொல்காப்பியளுரைத் திரண துரமாக்கினியாக்கித் தமிழக வரலாற்றிற் புகை மூளச் செய்வது தகாது.