பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொல்காப்பியம் தொல்காப்பியனர் வரலாற்றை உள்ளவாறு அறிதற்கு அவரால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் முழுமுதல் நூலும், அந்நூன்முகத்துக் காணப்படும் சிறப்புப் பாயிரமுமே சான்ருவனவாம். இவற்றையடிப்படையாகக் கொண்டு நோக்குங் கால் அகத்தியர்ைக்குந் தொல்காப்பியஞர்க்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்பது தெளிவாம். தொல்காப்பியனரோடு உடன் பயின்றவராகிய பனம்பாரளுர் கூறிய சிறப்புப் பாயிரத்தில் அகத்தியனுரைப் பற்றியோ அவரியற்றிய முத்தமிழிலக்கணமாகிய அகத்தியத்தைப் பற்றியோ யாதொருகுறிப்புங் கூறப்படவில்லை. மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத் தென்மலையிருந்த சீர்சால் முனிவராகிய அகத்தியன பால் தமிழ் பயின்ற மாணவர் தொல்காப்பியர் என்பதும், அவ்வருந்தவ முனிவர் ஆக்கிய அகத்தியம் என்ற இலக்கண நூலைப் பொருந்தக் கற்று அதன் வழிநூல் செய்தவர் என்பதும் உண்மையாயிருக்குமானல், ஆக்கியோன் பெருமையும் நூலின் பெருமையும் அதன் வழியும் விளக்குதற்குரிய இச்சிறப்புடைய நிகழ்ச்சிகளைப் பனம்பாரளுர் தம் சிறப்புப் பாயிரத்திற் சொல்லியிருப்பர். அகத்தியனுரைப் பற்றியோ அவர் செய்த அகத்தியத்தைப்பற்றியோ அவ்வாசிரியர் ஒன்றும் கூறிஞரல்லர். இன்றியமையாது குறித்தற்குரிய இச் செய்திகளைக் குறிப்பிடாமல் தொல்காப்பியம் பாண்டியன் அவையத்து அரங்கேறிய நாளில் அந்நூலைக் குற்றந்தீரக் கேட்டார் அதங்கோட்டாசான் என்பதும், தொல்காப்பியர் தமது நூலை முந்து நூல்கண்டு முறைப்படுத்தினர் என்பதும் ஆகிய வற்றை மட்டுமே பனம்பாளுர் கூறுகின்றர். தொல்காப்பிய ஞர்க்கு அகத்தியனர் ஆசிரியராயின் தொல்காப்பிய நூலரங் கேற்றத்தில் அவரே முதலிடம் பெறுதற்பாலார் அகத்தியஞர் பெயர் பாயிரத்திலோ நூலிலோ யாண்டும் சுட்டப்படாமையால் அவர்க்கும் தொல்காப்பியர்ைக்கும் யாதொரு தொடர்புமில்லாமை புலம்ை. தம், காலத்துக்கு:முன் இயற்றப்பெற்ற தமி நூல்கள்