பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? தொல்காப்பியம் பத்தை இயற்றியவர் தென்னுட்டிலேயே பிறந்து செந்தமிழ் பயின்று சிறந்த புலவராதல் வேண்டும். இருக்கு வேதத்திற் பல பதிகங்களை இயற்றிய ஆசிரிய ரொருவர் அகத்தியர் என்ற பெயராற் பேசப்படுகின்ருர். வட நாட்டிலிருந்து இராமபிரான் இலங்கைவேந்தன்மேற் படை யெடுத்து வந்தபொழுது அகத்தியர் வீற்றிருக்குந் தவப்பள்ளிக்குச் சென்று அவரால் வரவேற்று உபசரிக்கப்பெற்ருன் என வான்மீக இராமாயணங் கூறும். இந்நூல் அகத்தியர் இருப்பினை நிகழ் காலத்தில் வைத்துப் பேசுவதுடன் ஒன்றற்கொன்று பெரிதுஞ் சேய்மையிலுள்ள அகத்தியர் தவச்சாலைகள் பலவற்றைக் குறிப் பிடுகின்றது. கோசல நாட்டின்கண் ஒடும் வேதசுருதியாற்றங் கரையிலும், விந்தியமலைக்குத் தெற்கே நெடுந்துரத்திலமைந்த கோதாவிரி யாற்றங் கரையிலும், தெற்கே மலயமலையிலும், இலங்கைத்தீவின் தெற்கே குஞ்சரமலையிலும் அகத்தியர் என்ற பெயர் தாங்கிய முனிவர் பலர் இருந்தனர் என வான்மீக இராமாயணம் கூறுகின்றது. இக்குறிப்புக்களால் அகத்தியர் என்ற பெயருடையார் பலர் வடநாட்டிலுந் தென்னுட்டிலும் ஒரு காலத்தே பலவிடங்களில் தங்கியிருந்தமை உய்த்துணரப்படும். இவர்களுள் தமிழ்நாட்டில் மலயமலைக்கண் (பொதியமலையில்) தங்கியவராகக் குறிக்கப்படும் அகத்தியரே த ர்த்தவராகப் பிற்காலத்துப் புலவர்களாற் பேசப்படுகின்ருர் ஆல்ை தலைச் சங்கத்தவராகிய அகத்தியனர் தென் மதுரையிலும் கபாடபுரத் திலும் தங்கியிருந்தார் எனக் களவியலுரை கூறுகின்றது. மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலையினை வலம் வந்து குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து மதுரைக்கு வந்து கவுந்தியடிகளைக் கண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறும். இங்கே மாதவ முனிவன் என்றது அகத்தியனை யெனவும் மலையென்றது அவனுக்குரிய பொதிய மலையை யெனவும் அடியார்க்கு நல்லார் கூறுவர். மழைபெய்யும்