பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 53 காலத்தைப் புலப்படுத்தும் அறிகுறியாக வானத்தில் விளங்கும் விண்மீனென்று பொதியின் முனிவன் என்ற பெயராற் பதினேராம் பரிபாடலிற் குறிக்கப்பட்டுளது. இவ்வாறு பொதியில் முனிவன் என ஒருவிண்மீன் பெயர்பெற்றதை நோக்குங்கால் அப்பெயரு டைய முனிவர் நம் தமிழகத்திற்கு மிகவும் பழையவர் என்பது உய்த்துணரப்படும். காந்தமன் என்னும் சோழன் பரசுராமனுக்கு அஞ்சி அகத்தியனரைப் பணிந்து அவர் சொல்லியவண்ணம் தன் காதற்பரத்தை மகளுகிய ககந்தன் என்பாணப்புகார் நகரத் திற்கு அரசனுக்கி மறைந்தொழுகினன் என மணிமேகலை கூறு கின்றது. அமரமுனிவன் அகத்தியனது கரகங் கவிழ்த்தமையா லுண்டாகிய காவிரியாறு நேர் கிழக்கேயோடிவர, மேருமலை யிலிருந்த சம்புத்தெய்வம் புகார் நகரத்தருகே சென்று நின்று அக்காவிரியை யெதிர்கொண்ட வரலாறு மணிமேகலை கதை பொதி பாட்டிற் குறிக்கப்படுகிறது. சிவபெருமான நாடோறும் முப்பொழுதும் இலிங்க வடிவில் நிறுத்தி வழிபட்டுப் போற்றிய அகத்தியமுனிவர்க்கு அப்பெரு மான் மணிகள் மிக்க அழகிய பொதிய மலையில் என்றும் வீற்றி ருக்கும் பெருஞ்சிறப்பினை அருளிச்செய்தார் என்பதனைச், 'சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சிந்து மாமணி யணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்" என வருந் திருப்பாடலால் நம்பியாருரர் குறித்துப் போற்றி யுள்ளார். - தமிழ் வேந்தளுகிய பாண்டியன் கேட்பத் தவத்தால் மனத் தூய்மை பெற்ற அகத்திய முனிவர் தமிழுக்கு இலக்கணஞ் செய்தார் என்பதனைத்,