பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 55

  • உழக்குமறை நாலினும் உயர்ந்துலகம் ஒதும் வழக்கினும் மதிக்கவினி னும்மரபின் நாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்"

எனவும் கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் பாராட்டிப் போற்றி புள்ளார். தமிழ் மொழியை உலகமெலாந் தொழுதேத்துங் குடமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்லேற்றுப்பாகர்' என்பர் சிவ ஞான முனிவர். தமிழ்க்கடவுளாகிய முருகப் பெருமானிடத்து அகத்தியர் தமிழ் பயின்ருர் என்னுங் கதையும் தமிழ் நாட்டிற் பயின்று வழங்குகின்றது. தென்மதுரைத் தலைச் சங்கத்துத் திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் வீற்றிருந்து தமிழாராய்ந்தார்கள் எனக் களவியலுரை கூறுதலின் அவ்விருவர்பாலும் அகத்தியனர் தமிழ் பயின்ருர் என்னுங் கதை கள் தோன்றுவனவாயின. 'தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிற வெல்லையுமுளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறிஞர், அகத் தியஞர்க்குத் தமிழைச் செவியறிவுறுத்த செந் தமிழ்ப் பரமாசாரிய கிையஅறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி யென்பது" எனச் சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியிற் கூறியது இக்கதையின் பயிற்சியை நன்கு புலப்படுப்பதாகும். தலைவர்வழி நின்று தலைவனுகிய அகத்தியருற் செய்யப் பட்டதும் முதனூலென்றும், அகத்தியமே முற்காலத்து முதனூல் என்றும், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்றும், அகத்தியர் வழித்தோன்றிய ஆசிரியர் எல்லாருள் ளும் தொல்காப்பியனரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்றும், அகத்தியர் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழுக்கும் இலக்கணங் கூறினரென்றும், செய்யுளிலக் கணம் அகத்தியத்திற் பரந்து கிடந்ததனைத் தொல்காப்பியர்ை சுருங்கச் செய்தாரென்றும், அதனருமையையுணர்ந்த பல்காப்பிய ஞர் செய்யுளிலக்கணத்தைப் பகுத்தோதினரென்றும் பிற்காலத்