பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్లెడ தொல்காப்பியம் துக் காக்கைபாடினியாரும் தொல்காப்பியத்தொடு பொருந்தவே யாப்பிலக்கணம் இயற்றினரென்றும், ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனர் செய்தாரெனக் கூறுங் கூற்றுப் பொருந்தாதென்றும் பேராசிரியர் விளக்கியுள்ளார். தென்மதுரைத் தலைச் சங்கத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணமாக அகத்தியனராற் செய்யப் பட்ட அகத்தியம் என்றதொரு தமிழிலக்கண நூல், இறையனர் களவியலுரையிலும் இளம்பூரணர் பேராசிரியர் உரைகளிலும் பெயரளவிற் சிறப்பித் துரைக்கப்படுவதனை நோக்குங்கால், அப் பெயருடையதொரு தமிழிலக்கண நூல் பண்டைநாளில் வழங்கியதென்பதனை முன்னுள்ளோர் உடன்பட்டுப் போற்றினமை உய்த்துணரப்படும். எனினும் அந்நூலில் ஒரு சிறு பகுதியும் உரையாசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே அந்நூல் கடல்கோள் முதலிய இடையூறுகளால் பண்டை நாளிலேயே வழக்கொழிந்திருத்தல் வேண்டுமெனவும் அந்நிலையிற் பிற்காலத் தார் சிலர் அகத்தியர் செய்தனவாகப் புதியன சிலவற்றைப் படைத்து வழங்கினரெனவும் கருதவேண்டியுளது. இங்ங்ணம் அகத்தியனர் செய்யாதனவற்றை அவர் செய்தனவாகப் படைத்து வழங்கியது போன்றே தென்றமிழ் நாட்டிற்பிறந்து வளர்ந்த தமிழ் நூலாசிரியரை வடநாட்டிலிருந்து வந்தவராகக் கற்பித்துரைக் குங் கதைகளும் படைத்து வழங்கப் பெறுவனவாயின. குடதிசை யிலமைந்த மலைத்தொடரைச் சேர்ந்த மலயமலையில் வாழ்ந்த முனிவர் குடமுனிவர் என வழங்கப்பெற்ருர், பிற்றைநாளில் அப் பெயர் வடமொழியிற் கும்பமுனி எனத் தவருக மொழி பெயர்க்கப் பட்டு, நான்முகனுக்குக் கும்பத்திற் பிறந்தவர் அம்முனிவர் எனப் பொருந்தாக் கதையொன்றும் புனையப்படுவதாயிற்று. 'கலச யோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க'; என நச்சினர்க்கினியர் கூறுதலால், அகத்தியர் நான்முகனுக்குக் கும்பத்திற் பிறந்தார் என்னுங்கதை அவர் காலத்தே வழங்கத் தொடங்கினமை யறியலாம்.