பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露露 தொல்காப்பியம் மகன் சாரகுமாரன் எனப் பெயரிடப் பெற்ருன் என்றும் பிற் காலத்து வடமொழிப் பெயரால் இக்கதை குறித்தலால் இது மிகப் பிற்காலத்தே புனைந்துரைக்கப்பட்ட தென்பது தெளிவாம். இருக்கு வேதத்தில் ஒரு சூக்தத்தை இயற்றியவராகச் சொல்லப்படும் அகத்தியர், லோபா முத்திரையாரை மணந்தவ சாகப் போற்றப்பெறுகின்ருர். வடநாட்டார். தென்னடு புகுதற்குத் தடையாயிருந்த விந்தமலையை அடக்கித் தென்னுடு புகுந்த அகத்தியர் இவரேயென்பர். வடநாட்டிலிருந்து தென்னுட்டிற் குடியேறிய ஆரியருள் அகத்தியரே முதல்வராதல்பற்றி அவர் புகுந்து தங்கிய தென்திசையை வடமொழியாளர் ஆகஸ்தியம் எனப் பெயரிட்டழைத்தனர் என்றும், தமிழர் உடன்பட்ட அகத்தியர் பொதியிற்கண் இருந்த முனிவரே என்றும் 'ஏழியன் முறையது' என்னுஞ் சூத்திரத்தில் அகத்தியனர் பாணினியையும் இந்திரனை பும் எடுத்தோதியுள்ளனர் என்று பிரயோக விவேக நூலார் கருதுவதால் அவர் கருத்துப்படி நோக்கின் இத்தமிழிலக்கணஞ் செய்த அகத்தியனர் அகத்தியர் வழியிற் பாணினிக்குப் பிற்பட்ட வராவரென்று துணியலாமென்றும், இச்சூத்திரத்தில் பாணினி மதத்தையுடம்படாது ஐந்திரமதத்தையுடன்பட்டனர் அகத்தியனர் என்றும், ஒதிய புலவனும் உளன் என நிகழ்காலத்தில் வைத்துப் பாணினியைக் குறிப்பிடுதலால் இவர் காலத்தே வடமொழி யாசிரியர் பாணினி யென்பார் வாழ்ந்தாரெனத் துணியலா மென்றும், அகத்தியர் பாணினி மதத்தையுடன்படாது ஐந்திர மதத்தை யுடன்பட்டமையால் இவர் மாளுக்கராகிய தொல் காப்பியருைம் ஐந்திரத்தையுடன்பட்டு ஐந்திர நிறைந்த தொல் காப்பியன் எனப் போற்றப்பெற்ருரென்றும் கூறுப. அன்னேர் காட்டும் அகத்தியச் சூத்திரம் மிகமிகப் பிற்காலத்தில் இயற்றப் பட்டதென்பது அதன் சொல்லமைதியால் நன்கு துணியப்படுத 1. மகாவித்வான் ரா. இராகவையங்கார வர்கள். (தமிழ் வரலாறு-பக்கங்கள் 192-217).