பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு §§ அறிவுமிக்கிருந்தன ரென்றும் அவ்வவையினர் கேட்ப அதங் கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் தொல்காப்பியனர் குற்றந்தீர விடை கூறினரென்றும் நச்சினர்க்கினியர் கூறுவர்." இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தான் என்பதன் கருத்து ஏனையோரைக் காட்டிலும் இவ்வேந்தன் நெடுங்காலம் வாழ்ந் தான் என்பதேயாகும். இவன் கல்வி வளர்ச்சியிற் கருத்துடைய ய்ை அறிஞர் பலரையும் பேணித் தன்னுட்டிற்கு இன்றியமையாத அரும்பொருள்கள் ய ல வ ற்றையும் வேற்றுப்புலத்திலிருந்து கொண்டுவந்து தந்து தன் குடிமக்களைப் போற்றிச் சிறந்த முறையில் அரசியலை நிகழ்த்தின்ை. இவ்வேந்தனது அரசியல் நெறி சிறப்புடை மரபின் ஆட்சிபுரியும் பெருவேந்தர் பலர்க்கும் எடுத்துக் காட்டாக விளங்கியது. ஆகவே இவ்வேந்தர் பெரு மானைப் பின் வந்த பெருவேந்தர்களுக்கு உவமையாக எடுத் துரைக்கும் வழக்கம் தமிழகத்தில் நிலவுவதாயிற்று. “ வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி " என மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்தியதாக இளங்கோவடிகள் கூறியது, நிலந்தரு திருவிற் பாண்டியன் வரலாற்றைக் கருதியதேயாகும். வடிம்பலம்ப நின்ற பாண்டியனே நிலந்திருவின் நெடியோன் என்பது நச்சிஞர்க்கினியரது கருத்தாகும். “ எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே " 1. “பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தாளுதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றந்திர விடை கூறுதலின் "அரிறயத் தெரிந்து' என்றர்." - தொல் - சிறப்புப் பாயிரவுரை.