பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு $3 பலகொல்' என இப்புலவர் 15-ம் புறப்பாடலிற் கூறியுள்ளார். எனவ்ே இப்பாடலைப் பாடிய நெட்டிமையார், தொல்காப்பியனர் காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டவரென்பது தெளிவாதல் காண்க. பஃறுளியாறும் கு ம ரி ம லை யும் தொல்காப்பியம் இயற்றப் பெறுவதற்கு முன்னர்க் கடல்கோளால் அழிந்தமை முன்னர் விளக்கப்பட்டது. இங்ங்ணம் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னர்க் கடல்கோளால் அழிந்தொழிந்த பஃறுளியாற்றின் மணலே முதுகுடுமிப் பெருவழுதியின் வாழ்நாட் பெருக்கத்திற்கு நெட்டிமையார் உவமை கூறி வாழ்த்தினரென்றல் வாழ்த்தியல் முறைக்கு ஏற்புடையதன்ரும். அவர் காலத்திற் பழைய பஃறுளி யாறு கடல்கோளால் அழியாதிருந்ததெனக் கருதுதற்கும் இட மில்லை, எனவே முந்நீர்விழவின் நெடியோன் நன்னீர்ப்பஃறுளி என நெட்டிமையாராற் கூறப்பட்ட பஃறுளியென்பது, தலைச்சங்க காலத்தில் தென்மதுரையின் பாங்கர்ஓடிய பஃறுளியாறு கடல் வாய்ப்பட்ட பின்னர் அதன் நினைவாக உள்நாட்டிற் புதுவதாக வெட்டப்பட்டதோர் ஆற்றினையே குறிப்பதாகுமெனத் துணிய வேண்டியுளது. திருவாங்கூர் நாட்டிற் பரளியென்னும் பெயருடன் இக்காலத்து விளங்கும் யாறு இப்பெயர் வழக்க நினைவினை வலியுறுத்துவதாதல் காணலாம் கடைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் முதல்வனுகக் களவியலுரை கூறும் முடத்திருமாறனே நிலந்தரு திருவிற் பாண்டியன் என மகாவித்துவான் இராகவையங்காரவர்கள் கூறி புள்ளார்கள். அக்காலத்துப் போலும் பாண்டியளுட்டைக் கடல் கொண்டது' எனக் களவியலுரையிற் சொல்லப்பட்ட கடல்கோள் இடைச்சங்கத்திறுதியில் நிகழ்ந்ததாகும். நிலந்தரு திருவிற் பாண்டியனத் தலைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் ஒருவன் என்றும் அவன் காலத்துப் பஃறுளியாறு குமரிமலை முதலிய நிலப் பகுதியைக் கடல்கொண்டதென்றும் அடியார்க்கு நல்லார் கூறுத லால் 'பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள" என இளங்கோவடிகள் குறித்த கடல்