பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தொல்காப்பியம் கோள், தலைச்சங்கத் திறுதியில் நிகழ்ந்ததெனத் தெரிகிறது. அன்றியும் இடைச் சங்கத்தார்க்குங் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் எனக் கணக்காயனர் மகளுர் நக்கீரனுர் கூறிய கொள்கையைப் பேராசிரியர் விளக்குதலால், ஆசிரியர் தொல்காப்பியனர் காலம் இடைச்சங்கத் தொடக்கமும் தலைச்சங்கத் திறுதியுமெனவே கொள்ளப்படும். ஆகவே தலைச் சங்கத் திறுதியில் ஆசிரியர் தொல்காப்பியனுரைக் கொண்டு தொல்காப்பியம் என்னும் இயற்றமிழியல் நூலை இயற்றுவித்து அதனைத் தன் அரசவைப் புலவர் முன் அரங்கேற்றி வெளிப் படுத்திய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான் தலைச்சங்கத் திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவன் என் பது தெளிவாம். முடத்திருமாறன் என்பான் இடைச் சங்கத்திறுதி யில் நேர்ந்த கடல்கோளில் தப்பிப் பிழைத்து கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தவளுவன். எனவே வேறுவேறு காலத்தினராகிய இவ்விரு பெருவேந்தரையும் ஒருவராகக் கொள்ளுதல் எவ்வாற். ருனும் பொருந்துவதன்ரும். தென்மதுரையில் காய்சின வழுதி யால் தோற்றுவிக்கப்பெற்றுத் தொன்றுதொட்டுத் தொடர்ச்சியாக நிகழ்ந்துவந்த தமிழ்ச்சங்கம் இடைக்காலத்தே நேர்ந்த பெரிய இடையூறுகளால் இருமுறை இடையறவுபட்டமையால் ஒன்றெனக் கருதப்படாது தலை, இடை, கடை என மூன்ருகப் பேசப் படுவதாயிற்று. தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் திறுதியிலும் ஆகஒருமுறை நிகழ்ந்த கடல்கேர்ள்களே இவ்விடை யறவுக்குரிய காரணமாகும். சிலப்பதிகாரத்தினையும் இறையனுள் களவியலுரையினையும் பேராசிரியர் அடியார்க்கு நல்லார் முதலி யோர் உரைக் குறிப்பினையும் ஒப்பு நோக்குங்கால் மேற்காட்டிய செய்திகள் இனிது புலளுதல் காணலாம். பAண்டியன் அவையம் துண்ணறிவுடைய சான்ருேர் பலரும் தம்முள் இகலின்றி ஒருங்கு கூடி மக்களது வாழ்க்கை முறையினை மேன்மேல் உயர்த்துதற்