பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi அப் பழமையினையொட்டிக் காலந்தோறும் இயல்பாக நிகழ்தற் குரிய புதிய மாற்றங்களுக்கும் இடந்தரும் நிலையில் அமைந் திருத்தலால், இனி எதிர்காலத் தமிழிலக்கியங்களுக்கும் இதுவே தமிழிலக்கணம் எனச் சொல்லும்படி புதுமைப் பொலிவுடைய தாகவும் விளங்குகிறது. தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கந்தரும் முறையில் அமைந்த தொல் காப்பியமாகிய இலக்கணத்தினை மாணவரும் பிறரும் ஆர்வத் துடன் படிக்கத் தூண்டும் முறையில் தமிழிலக்கிய வரலாற்றில் தொல்காப்பியம் என்ற முதற்பகுதி, இப்பொழுது அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித்துறையின் சார்பில் வெளி வருகிறது. "தொல்காப்பியம்" தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த அரிய செல்வம். அதனுல் தமிழின் தொன்மை, எழுத்துத்திறன், சொல் வளம், பொருள்மாண்பு ஆகிய எல்லாம் நன்கு விளங்கும். அது.ஒரு ஒப்பற்ற இலக்கிணமென்று கற்றுணர்ந்தோரால் போற்றப் படுகிறது. இந்நாளில் பாஷைநூலில் காணப்படும் விதிகளெல் லாம் அதில் இருக்கின்றனவென்று இப்பொழுது மேல்நாட்டு சாஸ்திர உதவிகொண்டு கற்றுணர்ந்தோர் கருதுகிருர்கள். Dr. சங்கரன் என்பவர் அது இலக்கணத்துறையில் ஓர் அரிய சுரங்கம் என்றும்,அதை ஆராய்ச்சிசெய்து வேண்டிய கருத்துக்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் எழுதியிருக்கிருர். அப்படி ஆராய்ச்சிசெய்து அண்ணுமலைப் பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவிய பெருங் கொடைவள்ளல் ராஜா சர். அண்ணுமலைச் செட்டியார் அவர்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கத்தை வெளியிட்டிருக்கிருர். அது என்னவெனில் தமிழினுடைய செல் வத்தை உலகத்திற்கு எடுத்து விளக்கி வழங்கவேண்டுமென்பது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிவைப்பதில் இந்நூலிற்குத் தனிச் சிறப்பு உண்டு.