பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 65 குரிய வழக்குஞ் செய்யுளும் ஆகிய இருவகை நெறிமுறையினையும் ஆராயும் இடமே அவையம் என வழங்கப்பெறும் இத்தகைய அவையின் இயல்பினை எட்டுவகை நுதலிய அவையகத்தானும் என்ற தொடரால் தொல்காப்பியனர் குறிப்பிடுவர். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக் காருமை, அவாவின்மை என்னும் எண்வகை இயல்புகளையுடைய ராய் அவையின்கண் முந்தியிருப்போர் வெற்றியையே எட்டு வகை நுதலிய அவையகம் எனத் தொல்காப்பியம் பாராட்டிக் கூறுகின்றது. 'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை யவாவின்மை யென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை' எனவரும் ஆசிரிய மாலைத்தொடர், இவ் அவையின் சிறப்பினே அழகுபெற விரித்துரைக்கின்றது. ஊர்கள்தோறும் நிகழுங் குற்றங் குறைகளை உசாவியறிந்து வழக்கு நெறியால் முறைவழங்கு தலும், மக்களது ஒழுகலாற்றினை மேலும் மேலும் உயரச்செய்தல் கருதி உரையும் பாட்டும் என இருதிறத்தாற் கல்வித்துறையை வளர்த்தலும் அவையத்தார்க்குரிய கடமைகளாய் அமைந்தன. மக்கள் அறியவேண்டுவனவற்றை அறிதற்குரிய மனப்பயிற்சி யாகிய கல்விப் பயிற்சியும், கற்றவழியே நன்னெறியிலொழுகு தலாகிய நல்லொழுக்கப் பயிற்சியும் அவையத் தாரால் கண் காணித்தற்குரியனவாம். இக்கடமையினை யுளத்துட்கொண்ட பண்டைத் தமிழ் வேந்தர்கள், கல்வியும் நல்லொழுக்கமும் வாய்ந்த சான்ருேர்களே ஒருங்கழைத்துத் தமிழ்கூறும் நல்லுகத்து