பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 67 தமிழ் பயின்று ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலரையும் அழைத்துப் போற்றி, நவில்தொறும் நூல் நயங் காணும் புலவர் பேரவையினை இரண்டாம் முறையாக நிலை நிறுத்தினன். இவனுல் நிறுவப்பெற்ற இவ் அவையமே கபாட புரத்தில் நிகழ்ந்ததாகக் களவியலுரை கூறும் இடைச்சங்கமாகும். தென் மதுரைத் தலைச்சங்கம் கடல்வாய்ப்பட் டழிந்தமையால் அங்கு வாழ்ந்த அறிஞர்களால் இயற்றப்பெற்ற எத்துணையோ நூல்கள் அழிந்துபோயின. கடல்கோளில் அகப்பட்டு இறவாது எப்படியாவது தப்பிப் பிழைத்தல் வேண்டுமென எண்ணிய மக்கள், தாம் ஈட்டிய அரும் பொருள்களை யெல்ல்ாம் உதறிவிட்டு வெறுங்கையராய்த் தம் முன்னேர் இயற்றிய பெறலரும் நூற் சுவடிகளிற் பலவற்றையும் மறந்து வைத்துவிட்டு நடுக்கத்தால் விரைந்து ஓடிவர வேண்டிய துன்ப நிலையினராயினர். இங்ங்னம் பொருட் செல்வத்தையும் அறிவுச் செல்வத்தையும் இழந்து போந்து வறுமையுற்றுழலும் தன் குடிமக்களுக்கு அவ்விருவகைச் செல்வத்தையும் ஈட்டுதற்குரிய வழி துறைகளை வகுத்துத் தருவது மன்னனது கடமையாயிற்று. இக் கடமையினை மேற்கொண்டு வடதிசைக் கங்கையும் இமயமும் ஆகிய மாற்ருரது நிலத்தினை வென்று தன் நாட்டு மக்களைப் பொருட் செல்வமுடையாராகச் செய்த நிலந்தருதிருவிற் பாண்டியன், தன் அவையில் அறிஞர் பலரையும் ஒருங்கு கூட்டிச் சிறந்த அறிவு நூல்களை யியற்றப் பணித்துத் தமிழ்நாட்டின் அறிவுச் செல்வத்தையும் வளர்ப்பா யிைனன் மக்களிடையே எல்லாக் கலைகளும் திருத்தமாக வழங்கப பெறவேண்டுமானல், கலநூல்களெல்லாவற்றிற்கும் நிலைக்கள மாகத் திகழும் அவர்களது மொழி, தெளிவும் ஒட்பமும் அமைந்த இலக்கண வரம்புடையதாதல் வேண்டும். ஒருவரது கருத்தினை ஏனையோர் தெளிவாக விளங்கிக் கொள்ளுதற்கு ஏற்றபடியும் அவரது சொல்வழக்கு இடத்தாலும் காலத்தாலும் மாறுபட்டுப்