பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தொல்காப்பியம் பிழைபாடுருதபடியும் எழுத்தின் ஒலிமுறை, சொல்லமைப்பு பொருளுணர்த்தும் நெறி இவற்ருல் ஒருமொழி இயற்கை யாக வளர் தற்கேற்ற வரம்புடைமையினை விளக்குவது, அம் மொழியின் இலக்கண நூலாகும். இங்ங்ணம் இலக்கண வரம்புக்கு உட்பட்டியங்கும் மொழியே இடத்தாலும் காலத்தாலும் மாறுபடாது பொருளியல்பினை உள்ளவாறு எல்லோர்க்குந் தெரி விக்கும் ஆற்றலுடையதாகும். உலக வழக்கில் நிலைபெற்று வழங்கும் மொழியானது காலந்தோறும் மாறுபடுவதியல்பு. காலந்தோறும் நிகழும் மாறுபாடுகளால் மொழி தன் உருச் சிதைந்தழியாமல் அதனைக் கண்காணித்தலும், காலத்திற்கேற்பத் தோன்றிய இயற்கை மாற்றத்தை யுணர்ந்து பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்ற முறைப்படிப் புது வரம்பமைத் தலும் இலக்கண நூலார் கடனுகும். மக்களது மொழி வழக்கினை உலகியல் நெறிக்கேற்ப வரை யறுத்துக் காட்டும் இயல் நூலொன்று தன்காலத் தமிழகத் திற்கு இன்றியமையாதது என்பதை நிலந்தரு திருவிற்பாண்டியன் நன்குணர்ந்தான். தனது அவைக்களப் புலவருளொருவராகிய ஆசிரியர் தொல்காப்பியனுரை யழைத்து, எளிய இனிய இயற் றமிழ் நூலொன்று இயற்றித் தருதல் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அரசனது நற்கருத்தினையும் தமிழ் மொழிக்குத் தாம் செய்யவேண்டிய அரும்பணியின் திறத்தையும் சிந்தித் துணர்ந்த தொல்காப்பியனுர், தம் வாழ்விற் பயின்றுணர்ந்த கலைத் திறங்களின் பயனுகவும், தம் காலம் வரையிலும் வளர்ந்து சிறந்த தமிழன்னையின் எழில்மிக்க ஓவியமாகவும் தொல் காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலே யியற்றித் தமிழ் மக்களுக்கு அளித்தருளினர். அதங்கோட்டங்சான் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான், தான் விரும்பிய வாறு தொல்காப்பியனரால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம்