பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தொல்காப்பியம் பற்றித் தம் உள்ளத்திற்ருேன்றிய ஐயங்களையெல்லாம் அறிஞர் முன்னிலையில் எடுத்துக்கூற, அவர்கேட்ட ஐயங்களுக்கெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனர் தம் காலத்துத் தமிழ்கூறும் நல்லுல கத்து வழக்கும் செய்யுளுமாகிய இருவகை யியல்பினையும் நன்கு ஆராய்ந்து கேட்டோர் உள்ளத்தில் மயக்கந் தோன்ருதபடி இயற்றமிழியல்பு முறையினை விளங்க எடுத்துக்காட்டி விடை கூறினர். இச்செய்தியினை அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து, மயங்கா மரபின் எழுத்துமுறை சாட்டி எனவருஞ் சிறப்புப் பாயிரத் தொடரால் பனம்பாரனர் உய்த்துணர வைத்தல் அறியத்தக்கதாம். தொல்காப்பியம் இயற்றமிழ் நூல் 'மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி' என்புழி எழுத் தென்றது இயற்றமிழை. இயற்றமிழாவது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் பகுத்தாராய்ந்து அவற்றின் இயல்பினை உள்ள வாறு விளக்கும் மொழிநடையினை யுடையதாகும். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என வருந் திருக்குறளில் எழுத்து என்னுஞ் சொல் இயற்றமிழைக் குறித்து நிற்றல் இங்கு ஒப்பு நோக்குதற்குரிய தாகும். முந்து நூல்களில் இயல், இசை, நாடகம் ஆகிய முன்று தமிழுக்கும் பொதுவாக இலக்கணம் இயற்றப்பெற்றிருந்த தென்றும், ஆசிரியர் தொல்காப்பியனர் முத்தமிழுள் இயற்ற மிழுக்குரிய இலக்கணத்தைமட்டும் தனியே பகுத்தெடுத்துக் கொண்டு தாம் இயற்றிய தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூலில் ஏனைய இசை நாடக இலக்கணங்கள் கலந்து மங்காத வாறு தெளிவான முறையில் இலக்கணங்களை முறைப்படுத்தின ரென்பார் மயங்கா மரபின் எழுத்துமுறைகாட்டி என்ருரென்றும், இயற்றமிழுள்ளும் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றனுள் ஒன்றற்குரிய இலக்கணத்தை மற்றவற்றில் சேர்த்துக்கூருது