பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 73 முன்னர் எழுத்திலக்கணத்தை யுணர்த்தி அதன் பின்னர்ச் சொல்லிலக்கணத்தைக் கூறி இறுதியிற் பொருளிலக்கணத்தை விரித்து விளக்கினரென்ப்ார், மயங்காமரபின் எழுத்து.காட்டி யென்னது, எழுத்து முறைகாட்டி எனப் பனம்பாரனர் கூறின ரென்றும் சிவஞானமுனிவர் கூறுவர். வடமொழிப் புலவர் சிலர் தமிழ் மக்களுடன் அளவளாவிப் பழகியதன் விளைவாக வடமொழி வழக்குகள் சில தமிழகத்தில் இடம்பெறத் தொடங்கின. அந்நிலையில் தமிழிற் பிறமொழி மரபு விரவித் தமிழின் தனி மாண்பினைச் சிதைக்காது பாதுகாக்கக் கருதிய தொல்காப்பியனர், வடமொழிமரபு தமிழிற் கலவாதபடி தமிழின் தனியியல்பினை விளக்குமுகமாக இயற்மிழ் நூலாகிய இத் தொல்காப்பியத்தை இயற்றினரென்பார் மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி' என்ருரெனினும் அமையும். தொல்காப்பியத்திற் கூறப்படும் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய இலக்கணங் கள் யாவும் தமிழுக்கே உரியனவாம். வடமொழிக்குரிய இயல் பெதுவும் தமிழியல் நூலாகிய தொல்காப்பியத்திற் சொல்லப்பட வில்லை. இது தமிழுக்குரியதோ அன்றி வடமொழிக்குரியதோ என்னும் ஐயப்பாட்டிற் கிடனின்றித் தமிழுக்கேயுரிய இயல்பு களையே தொல்காப்பியனுர் தம் நூலிற் கூறியுள்ளார். இம் முறையினை யுணராத பிற்காலத்தார் சிலர். தொல்காப்பியனர் தமிழாக எடுத்தாண்ட காலம் உலகம் முதலிய பழந் தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களெனப் பிறழக்கொண்டு மயங்கினர். 'காலம், உலகம் என்பன வடசொல் அன்று; ஆசிரியர் வடசொற்களையெடுத்தோதி இலக்கணங் கூருராகலின்' என ஆசிரியர் நச்சினர்க்கினியர் அன்னேரது மயக்கத்தை நீக்கு முகத்தான் தொல்காப்பியத்திற் கூறப்பட்டன யாவும் தமிழுக்கே யுரியன வென்பதை நன்கு தெளிவித்தமை இவண் கருதற்குரிய தாகும்.