பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொல்காப்பியம் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் தொல்காப்பியத்தினை அரங்கேற்றுங்கால் அதங்கோட் டாசிரியர் கேட்ட விளுக்களுக்கெல்லாம் ஆசிரியர் தொல்காப்பிய ஞர் குற்றமற விடை கூறியது.கண்ட அவையத்தார், ஆசிரியரது தமிழ்ப் புலமையின் தெளிவினை யறிந்து மகிழ்ந்ததுடன் அவர்க்கு வாய்த்த ஐந்திர இலக்கணப் பயிற்சியின் நிறைவினையும் நன்குணர்ந்து ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் என அவரைப் பாராட்டிப் போற்றினர்கள். தவப்பெருஞ் செல்வராகிய ஆசிரியர், கடல்சூழ்ந்து விளங்கும் இவ்வுலகிலே ஐந்திர விலக்கணத்தை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத் தம்மைப் பலரும் பாராட்டத் தாம் இயற்றிய நூலையும் தம் பெயரால் தோற்றுவித்து வழங்கச்செய்து பல்வகைப் பெருங்குணங்களாலும் ஒன்ருக வுயர்ந்த பெரும்புகழை இவ்வுலகில் நிலைபெறச் செய்தார். இச்செய்தி, "மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே" என வரும் சிறப்புப்பாயிரத் தொடரால் இனிது புலனுதல் காணலாம். சிறப்புப்பாயிரத்திற் சுட்டப்பட்ட ஐந்திரம் என்ற நூலைப் பற்றியும் படிமை என்னும் சொல்லின் பொருளைப்பற்றியும் ஆராய்ச்சியாளர்களிடையே வேறுபட்ட கொள்கைகள் நிலவி வருகின்றன. இவற்றின் உண்மையினைக் கண்டறிந்தாலல்லது ஆசிரியர் தொல்காப்பியனர் வாழ்ந்த காலத்தைப்பற்றியும் அவர் தம் சமயவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளைப்பற்றியும் பலரும் தாம் விரும்பியவாறு கூறிச் செல்லும் கொள்கைகளின் வன்மை மென்மையினைத் தெரிந்து தெளிதல் இயலாது. ஆகவே அவை பற்றிய கொள்கைகள் இவண் சுருக்கமாக ஆராயப்படும்.