பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலவரையறை: முன்னுரை தமிழகம் மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற் றினையுடையது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் தமிழகத் தொன்மையை நன்கு ஆராய்ந்து வரையறுத்து எழுது வதில் கருத்துச் செலுத்திலர். இந்திய வரலாற் றாசிரியர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைப் பற்றிய நினைவே கொண்டிலர். 1 வட இந்தியாவினும் தென்னிந்தியாவே மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாறு மிகத் தொன்மையான காலத்திலிருந்தே எழுதப்பெறுவது மரபென்றால் இந்திய வரலாறு குமரி நாட்டிலிருந்தே தொடங்கப்பெறுதல் வேண்டும். குமரி ஆறும் குமரி மலையும், பனி மலையினும் கங்கையாற் றினும் மிக மிகத் தொன்மை வாய்ந்தனவாம். 'மன் பதை முதலில் தோன்றிய இடமே குமரி நாடாகும்". என்பது வரலாற்றாசிரியர் சிலரின் உறுதியான 1 கொள்கையாகும். Hitherto most historians of ancient India have written as if the south did not exist-Vincent A. Smith --The Oxford History of Indin-Page-15.