பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 99 விறலி, அவனுடைய விறலியா என மூன்று சொல் லாய் இரண்டு சந்தியாய், முன்னது எழுவாய்ச் சந்தி யும் பின்னது பெயரெச்சக் குறிப்புச் சந்தியுமா மென்க" (நன்னூல் விருத்தியுரை பக்கம் 207).

தொல்காப்பியர்க்கும் அதுவே கருத்தென்பது அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் உருபுகெடக் குகரம் வருமே" என்பதனால் அறியலாகும். நம்பியது மகன்' என்று விரித்தலா காது. நம்பிக்கு மகன்' என்றே விரித்தல் வேண்டும். சேனாவரையர்க்கும் இக்கருத்து உண்டென்பது "உயர்திணைத் தொகைவயின் ஆறாவதனை விலக்கி நான்காவதே சேறலின் 'இதனதிது விற்று' என்னும் சூத்திரத்தால் கூறப்படும் பொருளோடு உடன் வையாது இதனை வேறு கூறினார்," என்று கூறுவ தால் அறியலாகும். ஏழாவதாகிய 'கண்' வேற்றுமை இடப்பொருளை உணர்த்தும். இடம் என்பது நிலமாகிய இடமட்டு மின்றி வினை நிகழ்ச்சியிலும் காலத்திலும் சுட்டப் படும். கல்விக் கூடத்தில் என்பது இடத்தைக் குறிக் கும்; கற்றலில் என்பது வினை நிகழ்ச்சியைக்குறிக்கும், கற்கும் காலத்தில் என்பது காலத்தைக்குறிக்கும், இவ்விடப் பொருளைச் சுட்ட பல உருபுகள் தொல்காப் பியர் காலத்திலேயே பயின்றுள்ளன. கண், கால், புறம், அகம், உள், உழை,கீழ், மேல், பின், சார், அயல், புடை, தேம்,முன், இடை, கடை,தலை,வலம், இடம் முதலியனவற்றைக் குறிப் பிட்டுவிட்டு அன்னபிறவும் அதன்பால என்றும் கூறி யுள்ளார். இவைகளைச் சேனாவரையர் பொருள்வகை என்று கூறுகின்றார். இளம் பூரணரும் நச்சினார்க்