பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தொல்காப்பிய ஆராய்ச்சி கினியரும் உருபு வகை என்று கூறுகின்றார்கள். உருபுகள் என்றலே பொருத்த முடைத்து. ஆனால் ஏனை வேற்றுமைகளைப் பற்றிக் கூறிய விடத்து முத லில் வேற்றுமை இலக்கணத்தைக் குறிப்பிட்டுவிட்டு அடுத்த நூற்பாவில் அதற்குரிய பொருளை விரித்துக் கூறி வந்துள்ள முறைமையைக் கருதி சேனாவரையர் அவ்வாறு கருதிவிட்டனர் போலும். நன்னூலாசிரியர் "ஏழன் உருபு கண் ஆதியா கும்' என்று கூறிவிட்டு அடுத்த நூற்பாவில் "கண், கால்...... இடப்பொருளுருபே என்று கூறியிருப் பது சேனாவரையர் கொள்கைக்கு மாறுபட்டு ஏனை யோர் கொள்கையோடு பொருந்தியுள்ளது. அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் சேனாவரையர் கருத்தே ஏற்புடைத்து என்று கூறியுள்ளார். அவ் வாறு கூறுவதற்குச் சாத்திரியார் அவர்கள் தரும் காரணங்களுள் முதன்மையாவன: "ஏழாகுவதே. கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி' என்று கூறியவர் மீண்டும் “கண், கால், புறம், அகம்' எனக் கண் உருபைக் கூறியிருத்தல் வேண்டாம். அகம் என்பது உருபு எனக் கொண்டால் "ஊரகத்திருந்தான்' 'என்பது போன்ற இடங்களில் 'அத்து'ச் சாரியை வருதல் கூடாது. ஏனெனில் பெய ருக்கும் வேற்றுமையுருபுக்கும் இடையில் தான் சாரியை வரும். உருபால் தொடரப்படும் பெயருக் கும் வினைக்கும் இடையில் வருதல் இல்லை. இரண்டு காரணங்களும் ஏற்புடைத்தல்ல. 'கண்' எனப் பெயரிய வேற்றுமை என்று குறிப்பிட்டுவிட்டு அதன் உருபுகள் யாவை எனக் கூறுமிடத்தும் கண் உருபையும் கூறுதல் தெளிவுதரற்பொருட்டேயாகும்.