பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தொல்காப்பிய ஆராய்ச்சி எப்பொழுதும் காலம் உணர்த்துதல் வேண்டும் என்ற உறுதிப்பாடு இல்லை என்பர் சிலர்.1 தொல்காப்பியர் கருத்துப்படி வினைகள் இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை வினை, குறிப்பு வினை. தெரிநிலை வினை என்பது காலத்தை வெளிப்படையாக அறிவிப்பது. குறிப்பு வினை என்பது காலத்தைச் சூழ்நிலையால் முன்பின் தொடரும் சொல்லால் அறிவிப்பது. இரண்டுமே காலம் அறிவிக்கும் என்பதனை, குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்" என்று கூறுவதனால் தெற்றென அறியலாகும். . வினை என்பது காலமொடு வரும். அக்காலம் மூன்றாகும்; இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலமும் குறிப்பு வினையோடும் வரும்' என்று தெளிவுறக் கூறியிருப்பதனைத் தெளிந்து கொள்ளாத சிலர், குறிப்பொடு தோன்றுதல் என்பது தெரிநிலை வினைக்கும் கூறப்படும் செய்தியாகும் என்பர். குருடன் என்பது விழிகொண்டு பார்ப்போனுக்கும் பெயர் என்பது போலன்றோ இருக்கின்றது இவர் கூற்று. வினையெனப்படுவது" என்று கூறுவதனால் தொல்காப்பியருக்கு முன்பே 'வினை' என்ற பெயர் வழக்கில் இருந்துள்ளதாக அறியலாம். வினைக்குரிய காலங்கள் மூன்று என்ற பகுப்பீடும் தொல்காப்பி யர்க்கு முற்பட்டதாகும் என்பதும் "காலம் தாமே மூன்றென மொழிப” என்று கூறுவதனால் அறியலாம். 1 The word Ninaiyunkalai (கினையுங்காலை suggests that it is not compulsory that the verb should always denote time. 2 " குறிப்பொடு வருஉம் காலக் கிளவி' என வினையைக் காலக் கிளவி என்பதும் அறிந்திலர் போலும்.