பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 105 தொல்காப்பியர் வினை என்று பெயரிட்டது தத் ஆக்யாதம் ஏன பாவம்' 'கிரியா வாசகம்', ஆக்யாதம்' என்னும் கூற்றுக்களை உளத்திற் கொண்டே என்று சுப்பிரமணிய சாத்திரியார் கூறுவது உண்மைக்கு மாறானதாகும் என்று உரைக்கவும் வேண்டுமோ? குறிப்பு வினை தமிழுக்கே உரிய சிறப்பினது. அது தோன்றும் இடங்களையும் கூறியுள்ளார். 'அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பினானும் பண்பி னானும் என்று அப்பாற் காலம் குறிப்பொடு தோன்றும். ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் கண்ணும் ஏழாம் வேற்றுமையது நிலப் பொருட் கண்ணும் ஒப்பின் கண்ணும் பண்பின் கண்ணும் என இவையடிப்படையில் குறிப்பு வினை தோன்றும். 'பொன்னினன் ' என்பது குறிப்பு வினை. முன்பு பொன்னினன் என்றால் இறந்த காலம்: இப்பொழுது பொன்னினன் என்றால் நிகழ் காலம். அன்மை,இன்மை, உண்மை, வன்மை முதலிய பண்படிகளிலும் குறிப்பு வினை தோன்றும். இவ்வினைகள் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரி யன, இருதிணைக்குமுரியன என மூவகைப்படும். முற்று வினை. எச்ச வினை எனத் தன்மை வகையால் வினை இரு வகைப்படும். முன்னிலை வினை, படர்க்கை வினை, தன்மை வினை. என இட வகையால் மூன்று வகைப்படும்.

  • History of grammatical theories in Tamil: Page-142.