பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தொல்காப்பிய ஆராய்ச்சி செய்வினை. செயப்பாட்டு வினை, ஏவல் வினை வியங்கோள் வினை, முதல் வினை, சினை வினை, உடன் பாட்டு வினை, எதிர்மறை வினை எனப்பயன் வகையால் பலவகைப்படும். வினைகளைப்பற்றி இவ்வளவு விரிவாக ஆராய்ந்து, சில வினைகளின் விதிகளைக் குறிப்பிட்டுக் கூறிய ஆசிரியர் தொல்காப்பியர் கால இடைநிலைகளைப் பற்றிக் கூறினார் இலர். காலங்கள் மூன்றெனவும், அவை இறந்தகாலம். நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படும் எனவும் இவை மயங்கி வரும் எனவும் கூறியவர் கால இடை நிலைகளைப் பற்றிக் கூறாது ஒழிந்தமையை நோக்கத் தொல்காப்பியர் காலத்தில் இடை நிலைகளால் மட்டு மின்றி வேறு வகைகளாலும் காலம் உணர்த்தப்பட்டு. காலம் உணர்த்தும் வகை, வரையறைக்குட் படாமல் இருந்திருத்தல் வேண்டும் என்று கருத வேண்டி யுள்ளது. தொல்காப்பியத்திலும் அதற்கு முற்பட்ட பழைய இலக்கியங்களிலும் இடை நிலைகள் ஒழிந்த வற்றாலும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர் கால்டுவல் அவர்கள் திராவிட மொழி யில் வினைச்சொற் காலங்களின் தோற்றம் என்பது பற்றி ஆராயுங்கால், "திராவிட வினைக்காலங்கள் பல வும் வினையின் எச்ச வடிவங்களிலிருந்தே தோன்று கின்றன" எனக்கூறி வினை முற்று விகுதிகளை வினை யெச்ச வடிவங்களோடு இணைப்பதால் வினைமுற்றுக் கள் உருவாகுவனவாக முடிவுகட்டி யுள்ளார். அவர் கருத்திற்கிணங்க எச்சம் முந்தியது; முற்று பிந்தியது என்பதாகும். ஆனால் தொல்காப்பியர் கருத்து அவ் வாறு இருப்பதாகத் தோன்றவில்லை. முற்றிலிருந்து தான் எச்சம் உருவாகி இருத்தல் கூடுமேயன்றி எச் சத்திலிருந்து முற்று உருவாகியிருத்தல் முடியாது.