பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 107 ஆசிரியர் தொல்காப்பியர் பெயரெச்ச வாய்பாடு களையும் வினையெச்ச வாய்பாடுகளையும் கூறியுள்ளார். பெயரெச்ச வாய்பாடுகள் செய்யும் செய்த என்பன வாகும். செய்யும் என்பது முற்றாகவும் வரும் வகை யைக் கூறியுள்ளார். முருகன் உண்ணும் என்பதில் உண்ணும் என்பது முற்று. உண்ணும் முருகன் என் றால் உண்ணும் என்பது எச்சம். இதிலிருந்து அறியக் கூடியது என்னவெனில் முற்றும் எச்சமும் ஒரு காலத் தில் வடிவ வேறுபாடின்றி வழங்கி இருந்திருக்கக் கூடும் என்பதே. அன்றியும் 'எச்சம்' என்ற பெயர் முற்றுக்குப் பின்னர்தான் தோன்ற முடியும். ஒரு வினை தானே முடிவுறு தலின்றிப் பிறிதொன்றை நாடி முடிவுறுவதே எச்சமாகும். ஆதலின் முற்றிலிருந்தே எச்சம் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறு தலே ஏற்புடைத்து. அறிஞர் கால்டுவல் திராவிட மொழி வினையா னது செயப்பாட்டுப் பொருளை உணர்த்தும் வகை யைப் பெற்றிருக்கவில்லை என்றும், அது எப்பொழு தாவது பெற்றிருந்தது என்று கூறமுடியாது என்றும் கூறியுள்ளனர். செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே" எனத் தொல்காப்பியரே கூறியுள்ளார். இந்நூற்பாவால் செயப்பாட்டு வினை இருந்தது என்றும், ஆனால் செய் வினையால் செயப்பாட்டு வினைப்பொருளை உணர்த்து தல் மரபு என்றும் அறியலாம். அன்றியும் தொல் காப்பியர், பல விடங்களில் செய்ப்பாட்டு வினையைப் பயன்படுத்தி யுள்ளார். முதல் நூற்பாவே 'எழுத் sfe The Dravidian Verb is entirely destitute of a passive voice. properly so called, nor is there any reason to suppose that it ever had a passive Caldwell-463.