பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தொல்காப்பிய ஆராய்ச்சி தெனப்படும் எனச் செயப்பாட்டு வினையிலேயே தொடங்கப்பெற்றுள்ளது. ஆகவே தொல்காப்பியர் காலத்திலேயே தமிழில் செயப்பாட்டு வினை இருந் திருக்கிறது என்று அறியலாகும். திராவிட மொழி களில் செயப்பாட்டுப் பொருளை யறிவிக்கும் தனி யமைப்பு இல்லை என்று கூறுதல் பொருந்தாது. "திராவிட வினைச்சொல் நிகழ்காலம்என்ப தொரு காலத்தைப் பண்டு பெற்றிருக்கவில்லை. இறப்பு, எதிர்வு என்ற இரண்டே யிருந்தன என்பதற்கான சான்றுகளும் உள" என்று அறிஞர் கால்டுவல் கூறுவதும் பொருந்தாக் கூற்றாகும். "தமிழில் ஒரே எச்சவினைதான் உண்டு, பொது வாக அது இறந்த காலத்தையே குறிக்கும்" என்று அறிஞர் கால்டுவல் கூறுவது அவர் தொல்காப்பி யத்தைக் கண்டு கற்கும் பேறு பெறாததனாலேயே. தமிழில் வினைச் சொல்லமைப்புப் பல வகையாலும் வளம் பெற்று, உள்ளக் கருத்துக்களைத் தெள்ளிதில் உணர்த்துவதற்குரிய வகையில் தொல்காப்பியர் காலத்திலேயே அமைந்திருந்தது. பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் எவ் வாறு உருவாகின்றன? தமிழ்ச் சொற்கள் ஓட்டு நிலையைச் சார்ந்தன. ஒரு சொல்லைப் பகுதி, இடை நிலை, விகுதி என முப்பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு சொல்லின் தோற்றத்திற்கு அடிப்படையாயிருப் பதை வேர்ச் சொல் (Root) என்றும் பகுதி யென்றும் அழைப்பர். தொல்காப்பியர் குறைச்சொற் கிளவி என்பர். உரிச் சொல் என்று கூறப்படுவதும் அவ் வேர்ச் சொல்லே. 'உரிச் சொல்' என்றால் செய்யு களுக்கு உரிய சொல் என்றனர் பிற்கால உரையாசிரி